ஊர் ஊரா கச்சேரி நடத்தி கோடியில் சம்பாதிக்கும் அனிருத் – ஒரு வருஷத்துக்கே இத்தனை கோடியா?

Author: Shree
5 July 2023, 7:45 pm

உருவத்திற்கும் திறமைக்கும் கொஞ்சம் கூட சம்பந்தமேயில்லை என எல்லோரும் அனிருத் திறமை பார்த்து மெர்சிலிர்த்து போனார்கள். சூப்பர் ஸ்டாரின் உறவுக்காரராக இருந்தாலும் தன் திறமையால் பெரிய நட்சத்திர நடிகர்களையே கால்ஷீட்டிற்காக காத்திருக்க வைத்தார்.

ஆம், அனிருத்தின் எண்ட்ரி அப்படித்தான் இருந்தது. ‘ஒய் திஸ் கொலவெறி’ என தனுஷ் தங்கிலீஸில் வரிகளை எழுதி கொடுக்க, அதற்கு அனிருத் போட்ட மெட்டு உலகம் முழுவதும் வைரல் ஆனது. எண்ட்ரி ஆன முதல் பாட்டிலேயே ஒட்டு மொத்த உலகத்தையும் உலுக்கி விட்டார் அனிருத். மேலும், ‘நீ பார்த்த விழிகளில் கரையவும் ‘போ நீ போ’பாடலில் உருகவும் வைத்தார். இவரை விட கூடாது என ஒட்டுமொத்த சினிமா தயாரிப்பாளர்களும் அனிருத் வீட்டு வாசலில் காத்துக்கிடந்தார்கள்.

தற்போது கோலிவுட்டின் முன்னணி இசையமைப்பாளர் அனிருத் தான். பெரிய நடிகர்கள் படங்களே நோ சொல்லும் அளவிற்கு படு பிசியாக இருந்து வருகிறார். ஆம், திரைப்படங்களுக்கு இசையமைப்பதை தவிர வெளிநாடுகளுக்கு சென்று கான்சர்ட் நடத்தி வரும் அனிருத் அதில் பல கோடிகள் சம்பாதிக்கிறாராம். ஒரு ஆண்டில் மட்டும் ரூபாய் 100 கோடி சம்பாரித்துள்ளார் என்று கோலிவுட்டில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.

  • Viduthalai Part 2 OTT releaseஅவ்ளோ தான் முடிச்சு விட்டீங்க போங்க…விடுதலை 2 ஓடிடி-க்கு ஓட்டம்..வெளிவந்த அப்டேட்..!
  • Views: - 371

    0

    0