அரசியலில் பரபரப்பு திருப்பம்… சரத் பவாரை கட்சியில் இருந்து நீக்கிய அஜித் பவார்!!

Author: Udayachandran RadhaKrishnan
5 July 2023, 9:53 pm

மகாராஷ்டிரா அரசியலில் புதிய திருப்பங்கள் அரங்கேறி வருகிறது. சமீபத்தில், தேசியவாத காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய அஜித்பவார், ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா – பாஜக கூட்டணியில் இணைந்தார்.

மேலும் அஜித் பவார் மாநிலத்தின் துணை முதலமைச்சராகவும், அவரது ஆதரவாளர்கள் 8 பேர் அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டனர்.

இந்நிலையில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக தேசியவாத காங்கிரஸ் கட்சியை நடத்திவந்த அதன் தலைவர் சரத் பவாரை, உயர் பதவியிலிருந்து அவரது மருமகன் அஜித் பவார் நீக்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தேசியவாத காங்கிரஸ் கட்சியின் பெயர், சின்னத்திற்கு உரிமை கோரி அஜித் பவார் தரப்பு அளித்த மனு தேர்தல் ஆணையத்திற்கு வந்துள்ளதாக கூறப்படுகிறது.

ஜூன் 30 ஆம் தேதி (அதாவது ஆளும் கூட்டணிக்கட்சியுடன் இணைவதற்கு 3 நாட்கள் முன்பு) தேர்தல் ஆணையத்திற்கு அஜித் பவார் தரப்பில் அனுப்பப்பட்ட அந்த மனுவில், அஜித் பவாரை தலைவராகக் குறிப்பிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் 40 எம்.எல்.ஏ.க்கள் இதற்கு ஆதரவாக அந்த மனுவில் கையெழுத்திட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

முன்னதாக இது குறித்து பேசிய அஜித் பவார், மக்களின் நலனுக்காக நான் வைத்துள்ள சில திட்டங்களை செயல்படுத்த மகாராஷ்டிரா முதலமைச்சராக விரும்புவதாக தெரிவித்தார்.

சரத் பவார் அரசியலில் இருந்து விலகவேண்டும் எனவும், மற்ற கட்சிகளில் மூத்த அரசியல் தலைவர்கள், ஒரு வயதுக்கு பின் ஓய்வு பெறுகிறார்கள். ஆனால் நீங்கள் எப்போது ஓய்வு பெற்று புதியவர்களுக்கு வாய்ப்பு கொடுக்கப்போகிறீர்கள், எங்களுக்கு ஆசி வழங்க வேண்டும் எனவும் அவர் கூறினார்.

  • ajith kumar banner fell down in tirunelveli pss multiplex திடீரென சரிந்து விழுந்த அஜித் கட் அவுட்! தெறித்து ஓடிய ரசிகர்கள்… வைரல் வீடியோ