கீர்த்தி சுரேஷை புறக்கணித்த ரஜினி.. என்ன தலைவரே இப்படி பண்ணிட்டீங்க.. கலாய்க்கும் நெட்டிசன்கள்..!

Author: Vignesh
6 July 2023, 1:30 pm

தமிழ் சினிமாவின் மிகவும் திறமை வாய்ந்த கலை நுணுக்கம் அதிகம் தெரிந்து முறையாக திரைப்படம் எடுக்கும் சிறந்த இயக்குநர்களில் ஒருவர் மாரி செல்வராஜ். இவர் பல்வேறு புத்தகங்களையும் எழுதியிருக்கிறார். பிரபல இயக்குனரான ராமிடன் உதவி இயக்குனராக சுமார் 10 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரிந்திருக்கிறார்.

அவரிடம் திரை நுணுக்கங்களை கற்றுத்தெறிந்து திரைத்துறையில் இயக்குனராக அவதாரம் எடுத்தார். பிரபல வார இதழ் பத்திரிகையான “மறக்க நினைக்கிறேன்” என்ற தொடரை எழுதியுள்ளார். தமிழில் பெரியேறும் பெருமாள் படத்தை இயக்கி மாபெரும் வெற்றிப்படைத்தார். திருநெல்வேலிக்குப் அருகில் இருக்கும் புளியங்குளம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயத்தை தொழிலாக கொண்ட பெற்றோருக்கு பிறந்த மாரி செல்வராஜ் கிராமங்கள் சார்ந்த படங்களை இயக்குவதிலேயே ஆர்வமிக்கவராக இருக்கிறார்.

இவர் தனுஷை வைத்து கர்ணன் படத்தை இயக்கியிருந்தார். அதன் பிறகு தற்போது மாமன்னன் படத்தை இயக்கி அண்மையில் அப்படம் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வசூலும் ஓரளவுக்கு ஈட்டியது.

Mamannan - Updatenews360

இந்நிலையில், மாமன்னன் படத்தை பார்த்த ரஜினிகாந்த் ட்விட்டர் பக்கத்தில், சமத்துவத்தை வலியுறுத்தும் மாரி செல்வராஜின் ஒரு அருமையான படைப்பு என்றும், அவருக்கு தனது மனமார்ந்த பாராட்டுக்கள் என்றும், மிகச் சிறப்பாக நடித்திருக்கும் வடிவேலு, உதயநிதி, பகத் பஸில், ஆகியிருக்கு தனது வாழ்த்துக்கள் என்று ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார்.

இதில் ரஜினிகாந்த் கீர்த்தி சுரேஷ் பெயரை குறிப்பிடவில்லை என்பதால், இதனையடுத்து ரசிகர்கள் ரஜினிகாந்த் சொந்த தங்கச்சி கீர்த்தி சுரேஷ் யை டீலில் விட்டு விட்டார் என்று கமெண்ட்களை செய்து வருகின்றனர். கீர்த்தி சுரேஷ் அண்ணாத்த படத்தில் ரஜினிக்கு தங்கையாக நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

rajini-updatenews360
  • dhanush paid 25 lakhs hospital bill for his director illness நிஜமாகவே கர்ணன்தான்!… தன்னை வைத்து இயக்கிய இயக்குனருக்கு மாபெரும் உதவி செய்த தனுஷ்…