பணத்தாசை பிடித்தவரா நயன்தாரா?.. விக்கி – நயன் மீது கிரிமினல் நடவடிக்கை..-அதிர்ச்சியில் ரசிகர்கள்..!

Author: Vignesh
6 July 2023, 6:30 pm

போடா போடி திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் இயக்குனராக அறிமுகமானவர் விக்னேஷ் சிவன். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் வெளியாகி பிளாக் பஸ்டர் அடித்த நானும் ரவுடி தான் படத்தில் கதாநாயகியாக நடித்த நயன்தாரா உடன் காதல் ஏற்பட்டது.

7 ஆண்டுகளுக்கு மேலாக காதலித்து வந்த இவர்கள், இருவீட்டாரின் சம்மதத்தின் பெயரில் 2022ம் ஆண்டு ஜுன் 9ம் தேதி நயன்தாரா – விக்னேஷ் சிவன் திருமணம் நடைபெற்றது. வாடகைத்தாய் மூலம் இரட்டை குழந்தைகளை பெற்றெடுத்தனர்.

இந்நிலையில், நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் அவரது தந்தை தாய் ஆகியோர் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என லால்குடி டிஎஸ்பி அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

nayanthara - updatenews360.jpg 2

தங்களின் சொத்துக்களை தங்களுக்கே தெரியாமல் விக்னேஷ் சிவனின் தந்தை அபகரித்ததாக லால்குடி டிஎஸ்பி அலுவலகத்தில் விக்னேஷ் சிவனின் உறவினர்கள் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரில், தங்களின் சொத்துக்களை தங்களுக்கே தெரியாமல் விக்னேஷ் சிவனின் தந்தை அபகரித்ததாக குற்றஞ்சாட்டியுள்ளனர்.

nayanthara - updatenews360.jpg 2

மேலும், புகாரில் தந்தை சிவக்கொழுந்து, தாய் மீனாகுமாரி, சகோதரி ஐஸ்வர்யா மற்றும் விக்னேஷ் சிவனின் மனைவி நயன்தாரா ஆகியோர் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதனிடையே, இந்த மனு மீதான நடவடிக்கை விரைவில் எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

  • Good Bad Ugly Hit of Flop குட் பேட் அக்லி படம் ஹிட்டா? இல்லையா? இன்னும் எவ்வளவு கோடி வசூல் செய்யணும்?