கைநீட்டி பணத்தை வாங்கிட்டு இப்படி ஜகா வாங்கலாமா? விஜய் டிவியிடம் அசிங்கப்பட்ட கமல்?
Author: Shree7 July 2023, 5:59 pm
இந்திய தொலைக்காட்சிகளில் பல மொழிகளில் பரவலாக ஒளிபரப்பப்படும் நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக்பாஸ் ரியாலிட்டி ஷோ தமிழில் இதுவரை 6 சீசன்கள் முடிந்துள்ளது கமல் ஹாசன் தொகுத்து வழங்கி வரும் இந்நிகழ்ச்சிக்கு பெருவாரியான ரசிகர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் தற்போது அடுத்த சீசனாக பிக்பாஸ் 7 நிகழ்ச்சி துவங்க உள்ளனர். அதற்கான வேளைகளில் பிக்பாஸ் குழு மும்முரமாக இறங்கியுள்ளது. இந்த முறை யார் யாரெல்லாம் பங்கேற்க உள்ளார்கள் என்பதை கொஞ்சம் பொறுத்திருந்து பார்க்கலாம். கடைசியாக முகமது அசீம் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார். ஆனால் அதை மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது அடுத்த சீசனுக்கான வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. மேலும் இதில் போட்டியாளர் கிட்ட தட்ட ஒரு 5 பேர் தேர்வு செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளது. இந்த சீசனும் மற்ற சீசன்களை போலவே சர்ச்சை ஏற்படுத்தும் வகையில் இருக்கவேண்டும் என்பதற்காக பார்த்து பார்த்து போட்டியாளர்கள் தேர்வு செய்யப்பட்டு வருகிறார்களாம்.
இந்நிலையில் இந்த சீசனில் உமா ரியாஸ், KPY சரத், தொகுப்பாளர் மாகாபா, நடிகை ரேகா நாயர் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்கள். இவர்களுடன் பல திரையுலக பிரபலங்கள், அரசியல் பிரமுகர்கள், சீரியல் பிரபலங்கள், மாடல்கள், மற்றும் இசை கலைஞர்கள் என பலர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள ஆர்வம் காட்டுகிறார்களாம். மேலும் இந்த சீஷனுக்கான ப்ரோமோவை கமல் ஹாசன் நடித்து முடிந்துவிட்டதாக செய்திகள் கூறுகிறது. ஆனால் நிகழ்ச்சி துவங்குவதில் தான் சிறு குழப்பம் நிலவி வருவதாக கூறப்படுகிறது.
ஆம் கமல் தற்ப்போது அடுத்தடுத்து 4 படங்களில் பிசியாக நடித்து வருகிறாராம். மேலும் ப்ராஜெக்ட் கே படத்திற்காக வெளிநாடுகளுக்கு கூட செல்ல உள்ளதால் நிச்சயம் வார இறுதியில் அவரால் நிகழ்ச்சியில் பங்கேற்க முடியாதாம். அது சாத்தியமில்லாதது என்பதால் நிகழ்ச்சியை படம் முடித்துவிட்டு வரும் வரை தள்ளிவைக்க சொல்லிவிட்டாராம். இதனால் விஜய் டிவி கொஞ்சம் அப்செட்டில் உள்ளதாம். பணத்தை வாங்கிவிட்டு ப்ரோமோஷன் செய்வார் என பார்த்தால் படத்தை முடிச்சுட்டு வரேன்னு ஆப்பு அடிச்சிட்டு டாட்டா காட்டிவிட்டார் என புலம்புகிறார்களாம். கமல் இதற்கு முந்தைய சீசன்களை விட இதற்கு தான் அதிக சம்பளம் வங்கியுள்ளதாக பேசுச்சுக்கள் அடிபட்டுள்ளது.