இங்க வாடா மயிறு… ராதா ரவியை இழிவாக பேசிய கமல் ஹாசன் – இருந்தாலும் இவ்வளவு ஆங்காரம் கூடாது!

Author: Shree
8 July 2023, 3:18 pm

பழம்பெரும் வில்லன் நடிகரான ராதா ரவி தமிழ் சினிமாவில் தனக்கென தனி அடையாளத்தை உருவாகிக்கொண்டார். நடிகரும், அரசியல்வாதியுமான இவர் தென்னிந்திய நடிகர் சங்க செயலாளர் பதவியில் இருக்கிறார். தமிழ் சினிமாவில் பல்வேறு திரைப்படங்களில் குணசித்திரவேடங்களில் நடித்து பெரும் புகழ் பெற்றார்

அவர் அவ்வப்போது பொது மேடைகளிலும் பேட்டிகளிலும் சர்ச்சைக்குரிய வகையில் எதையேனும் பேசி விமர்சனத்திற்கு ஆளாகுவார். மேலும் சினிமா நட்சத்திரங்கள் மற்றும் அரசியல் பிரபலங்களை பற்றி பேசி எதையேனும் சர்ச்சை ஏற்படுத்துவார்.

அந்த வகையில் திரைப்பட விழா ஒன்றில் பேசி ராதா ரவி, தனக்கும் கமல் ஹாசனுக்கு பேச்சு மோதல் ஏற்பட்டதாக கூறியுள்ளார். அதாவது, ரஜினிகாந்த் நடித்த உழைப்பாளி படத்தின் போது அனைவரையும் வைத்து ஒரு மீட்டிங் வச்சோம்.

அந்த மீட்டிங்கில் கமல் ஹாசன் பேசியபோது, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களே சிதம்பர தலைவர் அவர்களே, விஜயகாந்த் அவர்களேன்னு எல்லாரையும் மரியாதையாக சொல்லிட்டு ராதாரவி என்று என்னை மட்டும் மொட்டையாக சொன்னார். அதற்கு நான் ஒன்றும் பேசவில்லை.

பின்னர் என்னை பேச அழைத்தபோது, நானும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களே, புரட்சித்தலைவர் அவர்களே, கமல் ஹாசன் என்றும் சொன்னேன். இதை சுதாரித்துக்கொண்ட கமல் மேடையில் ஏறி பின்னாடி வந்து என் கையை இழுத்து, நாங்க ரெண்டு பேரும் பேசும் போது கெட்ட வார்த்தை பேசுப்போம்.

அந்த அளவிற்கு நண்பர்கள் என சொல்லிக்கொண்டே இங்க வாடா, மயிறு, நான் வெறும் கமல் ஹாசனான்னு கேட்டாரு. அப்போது நானும் வெறும் ராதா ரவியான்னு கேட்டேன் என்று தெரிவித்துள்ளார். எவ்வளவு பெரிய நடிகராக இருந்தாலும் ராதா ரவி அவர் பாணியில் தான் மரியாதை கொடுப்பார். அப்படித்தான் கமலுக்கும் தக்க பாடம் புகட்டியிருக்கிறார் என நெட்டிசன்ஸ் கூறிவருகிறார்கள்.

  • Kayadu Lohar Visit Kalahasti Temple Crowd Gathered பவ்யமாக பழத்தை எடுத்து கொடுத்த கயாடு லோஹர்… மொத்தக் கூட்டமும் சுத்தி வந்திருச்சே!