விபத்தில் சிக்கிய திமுக நிர்வாகி… வேட்டியை மடித்து கட்டி வந்த விஜயபாஸ்கர் ; அரசியலை கடந்து வென்ற மனிதம்.. குவியும் பாராட்டு..!!

Author: Babu Lakshmanan
8 July 2023, 4:00 pm

புதுக்கோட்டை அருகே விபத்தில் சிக்கிய திமுக நிர்வாகியை காப்பாற்றி, அவர்களுக்கு முதல் உதவி செய்து தனது காரிலேயே மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரின் செயலுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

புதுக்கோட்டை தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலையில் இச்சடி என்ற இடத்தில் காரும், சரக்கு வாகனமும் நேருக்கு நேர் மோதி விபத்தில் இரண்டு பேர் காயமடைந்தனர்

.

அப்போது பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு விட்டு அந்த வழியாக அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் வந்து கொண்டிருந்தார். விபத்தை அறிந்து அவர் தனது காரில் இருந்து இறங்கி சென்று பார்த்த போது, விபத்துக்கு உண்டான காரில் திமுக கொடி கட்டப்பட்டிருந்தது. உடனடியாக அங்கு சென்று பார்த்தபோது, அந்த காரில் இருந்தது திமுக புதுக்கோட்டை ஒன்றிய செயலாளர் ராமகிருஷ்ணனின் தந்தையும், திமுக நிர்வாகியில் ஒருவரான கலியமூர்த்தி என்பது தெரியவந்தது.

கலியமூர்த்தி மற்றும் சரக்கு வாகன ஓட்டுநர் பால்ராஜ் என்பவரும் விபத்தில் பலத்த காயமடைந்து உள்ளது தெரிய வந்தது.

இதைத் தொடர்ந்து, துரிதமாக விஜயபாஸ்கர் செயல்பட்டு விபத்தில் காயம் அடைந்த திமுக நிர்வாகி கலியமூர்த்தியையும், சரக்கு வாகன ஓட்டுநர் பால்ராஜ் என்பவரையும் மீட்டு, அவர்களுக்கு உடனடியாக தானே முதலுதவி செய்து தன்னுடைய காரிலேயே இரண்டு பேரையும் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தார்.

விபத்தில் காயம் அடைந்தது திமுக நிர்வாகியாக இருந்தாலும் மனிதநேயத்துடன் அதிமுக முன்னாள் அமைச்சர் நடந்து கொண்டது அனைவரின் பாராட்டை பெற்றதாக இருந்தது.

  • Viduthalai Part 2 OTT releaseஅவ்ளோ தான் முடிச்சு விட்டீங்க போங்க…விடுதலை 2 ஓடிடி-க்கு ஓட்டம்..வெளிவந்த அப்டேட்..!
  • Views: - 604

    1

    0