தமிழகத்தில் 13 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் : தலைமை செயலாளர் வெளியிட்ட உத்தரவு!!
Author: Udayachandran RadhaKrishnan9 July 2023, 10:29 am
தமிழக அரசுத்துறைகளில் அவ்வப்போது பணியிட மாற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். அந்த வகையில், தமிழகத்தில் 13 ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி, சிறப்புத் திட்ட அமலாக்கத்துறை செயலாளராக தாரேஸ் அகமது ஐ.ஏ.எஸ். நில சீர்திருத்தத் துறை ஆணையராக வெங்கடாச்சலம் ஐ.ஏ.எஸ். பொதுத்துறை கூடுதல் செயலாளராக அதிகாரி சிவஞானம் ஐ.ஏ.எஸ். வருவாய் நிர்வாக ஆணையராக கலையரசன் ஐ.ஏ.எஸ். நீர்வளத்துறை கூடுதல் செயலாளராக மலர்விழி ஐ.ஏ.எஸ்.