அரை ட்ரவுசரில் ஹாட்டாக போஸ் கொடுத்த ராதிகா.. நடிகர் ரகுமான் கமெண்ட்டை கலாய்க்கும் ரசிகர்கள்..!

Author: Rajesh
9 July 2023, 2:00 pm

ராதிகா கிழக்கே போகும் ரயில் படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார். 1970 மற்றும் 80களில் முன்னணி நடிகையாக வலம் வந்தார் ராதிகா. இவர் ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜயகாந்த், சரத்குமார் என பல முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்துள்ளார். இதுமட்டும் இல்லாமல் தமிழ் தெலுங்கு மலையாளம் கன்னடம் இந்தி என பல்வேறு மொழிகளில் நடித்துள்ளார்.

மேலும் சித்தி என்னும் சீரியல் மூலம் சின்னத்திரையில் காலடி எடுத்து வைத்த ராதிகா பல ஹிட் தொடர்களை தயாரித்து நடித்துள்ளார். அதன் பின் சன் டிவியில் சித்தி 2 சீரியலில் இருந்து விலகி முழுநேர அரசியல்வாதியாகி விட்டார். தற்போது படங்களில் குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவாக இருந்து வரும் ராதிகா, போட்டோஷூட் படங்களை பதிவிட்டு இளம் ஹீரோயின்களுக்கு டப் கொடுத்து வருகிறார். அந்த வகையில், இவர் தற்போது அரை ட்ரவுசர் உடையில் எடுத்து கொண்ட புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

இதற்கு நடிகர் ரஹ்மான் போட்ட கமெண்ட் செம வைரலாகி வருகிறது. நடிகர் ரஹ்மான், ராதிகாவின் போட்டோவிற்கு “தனியா போயிருக்கீங்களா, கூட யாரும் வரவில்லையா?” என கமெண்ட் செய்துள்ளார். இதை பார்த்த நெட்டிசன்கள் ரஹ்மானை கலாய்த்து வருகின்றனர்.

  • அஜித் ரசிகர்களுக்கு கிறிஸ்துமஸ் சர்ப்ரைஸ்..விடாமுயற்சி பாடல் லிரிக் எப்போ ரிலீஸ்-னு தெரியுமா..!
  • Views: - 416

    4

    4