‘விடாமுயற்சி’ படத்திலிருந்து விலகும் திரிஷா..? வைரலாகும் பதிவு.. குழப்பத்தில் ரசிகர்கள்..!

Author: Rajesh
9 July 2023, 7:00 pm

ஜோடி படத்தில் துணை நடிகையாக அறிமுகமாகி, தற்போது தென்னிந்திய திரையுலகில் Top 3யில் இருப்பவர் நடிகை திரிஷா. இவர் ஹீரோயினாக மௌனம் பேசியதே திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். அதன் பிறகு ரஜினி, கமல், விஜய், அஜித், விக்ரம், விஜய் சேதுபதி என முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை பெற்றார்.

trisha krishnan - updatenews360

இப்படி தமிழ் சினிமாவின் எவர்க்ரீன் நடிகையாக வலம் வரும் திரிஷா, கிட்டத்தட்ட 25 ஆண்டுகளாக சினிமாவில் நிலைத்திருக்கிறார். 39 வயதாகும் இவர் இன்னும் அதே இளமையோடு இளசுகள் மனதில் மாறா இடம் பிடித்துள்ளார்.சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான பொன்னியின் செல்வன் – 2 இவரது இமேஜை தூக்கிவிட்டது.

மேலும், 14 வருட இடைவெளிக்கு பிறகு, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகவிருக்கும் லியோ படத்தில் விஜய் ஜோடியாக நடித்து வருகிறார். இதுமட்டுமின்றி, மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் நடிக்கும் விடாமுயற்சி படத்தில் கதாநாயகியாக கமிட் ஆகி இருந்தார். இருப்பினும், இத்திரைப்படத்தின் ஷூட்டிங் குறித்த தகவல் ஏதும் வராத நிலையில், இந்த திரைப்படத்தில் இருந்து த்ரிஷா விலக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த படத்திற்காக திரிஷாவிற்கு, இன்னும் அட்வான்ஸ் தொகை வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. மேலும் மலையாளத்தில் டோவினோ தாமஸ் நடிக்கும் Identity என்ற திரைப்படத்தில் திரிஷா நடிக்க உள்ளார். இதை அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டிருந்தார். விரைவில் அந்த படத்திற்கான படபிடிப்பு பணிகள் துவங்க உள்ள நிலையில், விடாமுயற்சி படத்தில் திரிஷா இணைவாரா? மாட்டாரா? என்பது குறித்த சந்தேகங்கள் தற்போது எழுந்துள்ளது.

  • kalanidhi maran office 8th floor was locked for many years கலாநிதி மாறன் அலுவலகத்தில் அமானுஷ்யம்? 8 ஆவது மாடியில் அப்படி என்ன இருக்கிறது?