நடிகை சரிதாவிற்கு சினிமாவில் இப்படியொரு ஆசையா..? அவரே சொன்ன சுவாரஸ்யமான விஷயம்..!
Author: Rajesh9 July 2023, 8:00 pm
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற மொழிகளில் 500க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்தவர் நடிகை சரிதா. தமிழ் சினிமாவில் கமல், ரஜினிக்கு இணையாக படங்கள் நடித்து வந்த இவர், ஒரு கட்டத்தில் நடிப்பதை குறைத்து டப்பிங் கொடுப்பதில் பிஸியாக இருந்து வந்தார்.
பின்னர், சில சீரியல்களில் நடித்து வந்தார். தனது திறமைக்காக பல விருதுகளையும் அள்ளி குவித்துள்ளார். இடையில் நடிக்காமல் இருந்த சரிதா தற்போது மீண்டும் ரீ என்ட்ரி கொடுத்துள்ளார். மடோனா அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், அதிதி ஷங்கர் நடிக்கும் மாவீரன் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
அண்மையில் ஒரு பேட்டியில் பேசிய நடிகை சரிதா, “எனக்கு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்க வேண்டும் என்பது ஆசை. எனக்கு அவர் படங்கள் பிடிக்கும், விக்ரம் படம் பார்த்துவிட்டு அவருக்கு போன் செய்து வாழ்த்துக்கள் சொன்னேன். மேலும், அதற்கு அவர், எனது அம்மாவிற்கு உங்களை மிகவும் பிடிக்கும் என்று லோகேஷ் கூறியதாக சரிதா தெரிவித்திருக்கிறார்.