‘மோடி சொன்ன 15 லட்சம் உங்க வங்கி கணக்கில் வந்ததா..?’ ரூ.1 லட்சம் பரிசு அறிவித்த திமுகவினர்.. மதுரையில் வைரலாகும் போஸ்டர்..!!

Author: Babu Lakshmanan
10 July 2023, 6:14 pm

மோடி சொன்ன 15 லட்சம் உங்கள் வங்கி கணக்கில் வந்ததா..? ஆம் என்றால் ரசீது காட்டுங்க ரூ 1 லட்சம் பரிசு என மதுரையில் திமுகவினர் ஒட்டிய போஸ்டரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

வெளிநாட்டில் உள்ள கருப்பு பணத்தை மீட்டு நாட்டில் உள்ள ஒவ்வொருவருக்கும் 15 லட்சம் வழங்கலாம் என 2014 தேர்தலுக்கு முன்பாக மோடி பேசியதாக சுட்டிக்காட்டி முதல்வர் ஸ்டாலின், 15 லட்சம் கூட வேணாம், 15000 ரூபாய் ஆச்சும் கொடுத்தீர்களா என கேள்வி எழுப்பி இருந்தார். இது அரசியல் வட்டாரங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதற்கு பதில் அளிக்கும் விதமாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலையும், அவ்வளவு பணத்தை வெளிநாட்டில் ஊழல்வாதிகள் பதுக்கி வைத்திருக்கிறார்கள் என்றுதான் பிரதமர் மோடி சொன்னாரே தவிர, அந்த பணத்தை ஒவ்வொரு இந்தியரின் வங்கி கணக்கில் செலுத்துவோம் என்று சொல்லவில்லை. வீடியோ ஆதாரம் இருந்தால் காட்டவும், என தெரிவித்திருந்தார்.

இது அரசியல் வட்டாரங்களில் திமுக மற்றும் பாஜகவினர் மத்தியில் கடும் விவாதங்களை கிளப்பியுள்ளது. இதற்கு பதில் அளிக்கும் விதமாக மதுரையைத் திமுக தொழில்நுட்ப அணியை சேர்ந்த நிர்வாகி ஒட்டி உள்ள போஸ்டரில், “மோடி சொன்ன 15 லட்சம் உங்கள் வங்கி கணக்கில் வந்ததா ??? ஆம் என்றால் ரசீது காட்டுங்க ரூ 1 லட்சம் பரிசு, குறிப்பு (சங்கிகளும் போட்டியில் கலந்து கொள்ளலாம்) என்ற வாக்கியங்களுடன் பிரதமர் மோடி புகைப்படம் அடங்கிய போஸ்டரை மாநகரில் பல்வேறு பகுதியில் ஒட்டியுள்ளது அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

  • Popular Unmarried Actress Pregnant Photos Goes Viral திருமணம் ஆகாமலேயே விஜய் பட நடிகை கர்ப்பம்… வைலராகும் போட்டோஸ்!!