ஓ அந்த படமே சுட்ட படமா?.. லோகேஷ் கனகராஜ் அடுத்த அட்லிப்பா.. வச்சு செய்யும் நெட்டிசன்கள்..!

Author: Vignesh
13 July 2023, 5:00 pm

கோவையை சேர்ந்த இளம் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் மாநகரம் படம் மூலம் சினிமாவில் அறிமுகமானார். தொடர்ந்து கைதி படத்தை இயக்கை பெரிய கவனத்தை பெற்றார்.

இதன் பின்னர் விஜய்யுடன் சேர்ந்து மாஸ்டர் படத்தை இயக்கினார். படம் மாஸ் ஹிட் ஆனது. தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநராக மாறினார்.

பின்னர் கமல்ஹாசனை வைத்து விக்ரம் படத்தை இயக்கினார். படம் மெகா ஹிட் அடித்து வசூல் சாதனை குவித்தது. இதையடுத்து மீண்டும் விஜய்யுடன் இணைந்து லியோ படத்தை இயக்கி வருகிறார்.

இந்நிலையில், கடைசி படமான விக்ரம் குறித்து தற்போது சமூக வலைதளங்களில் ஒரு செய்தி வைரலாகி வருகிறது. அதாவது விக்ரம் படம் ஒரு வெப் சீரிஸின் அப்பட்டமான காப்பி என்ற தகவல் தற்போது கிடைத்துள்ளது. பெட்டர் கால் செல் என்ற ஒரு வெப் சீரிஸ் கதையைத்தான் லோகேஷ் அப்படியே உறுவி விக்ரம் படமாக எடுத்து ஹிட் கொடுத்துள்ளார் என சமூக வலைதளங்களில் கிண்டல் செய்ய தொடங்கி விட்டனர். மேலும் லோகேஷ் கனகராஜ்யை அடுத்த அட்லி என்றும் கிண்டல் செய்து வருகிறார்கள்.

vikram film-updatenews360
  • Kalakalappu 3 Update சுட சுட வேலையில் சுந்தர் சி…கலகலப்பு 3-யின் கலக்கல் அப்டேட் வெளியீடு..!