பாதயாத்திரைக்கு முன்பு DMK FILES பாகம் 2 ரிலீஸ்.. அதிமுகவில் இருந்து திமுகவுக்கு தாவியவர்கள் தான்…சஸ்பென்ஸ் வைத்த அண்ணாமலை!!

Author: Babu Lakshmanan
14 July 2023, 1:24 pm

கோர்ட் விசாரணை என்று சொன்னால் நள்ளிரவில் நெஞ்சுவலி வந்து மருத்துவமனைக்கு செல்லக்கூடியவர்கள் யாரும் இங்கு இல்லை என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கிண்டலாக கூறியுள்ளார்.

ஏப்ரல் 14ஆம் தேதி திமுக பைல்ஸ் எனக் கூறி திமுகவில் முக்கிய பிரமுகர் உள்ளடங்கிய சொத்து மற்றும் ஊழல் பட்டியலை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டார் . இதனைத் தொடர்ந்து, தன் மீது பொய்யான குற்றச்சாட்டுகளை தெரிவிப்பதாகவும், ஆதாரம் அற்ற குற்றங்களை தெரிவிப்பதுமாக கூறி, திமுக பொருளாளர் டி ஆர் பாலு சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மீது அவதூறு வழக்கை தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி அனிதா ஆனந்த் ஜூலை 14ஆம் தேதி பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நேரில் ஆஜராக உத்தரவிட்டிருந்தார்.

அதன் அடிப்படையில் இன்றைய தினம் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சைதாப்பேட்டையில் உள்ள 17வது குற்றவியல் நீதிமன்றத்தில் நீதிபதி அனிதா ஆனந்த் முன்னிலையில் ஆஜரானார். நீதிமன்றத்தில் ஆஜரான பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேசியதாவது :- டிஆர் பாலு தொடர்ந்த அவதூறு வழக்கில் இன்று சைதாப்பேட்டையில் உள்ள நீதிமன்றத்தில் ஆஜராகினேன்.

ஏப்ரல் 14ஆம் தேதி திமுக ஃபைல்ஸ் பாகம் ஒன்றை வெளியிட்ட பிறகு, குறிப்பாக கட்சியில் பல பேருக்கு அது கோபத்தை உண்டாக்கி உள்ளது . திமுக ஃபைல்ஸ் ஒன்று வந்த பிறகு திமுக முதலமைச்சர், எம்பிக்கள் உட்பட வேற வேற ரூபத்தில் எனக்கு ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் கடிதம் அனுப்பி இருந்தார்கள். பாஜகவின் ஊழலுக்கு எதிரான போராட்டம் அடுத்த கட்டத்தை நோக்கி நகர்ந்து உள்ளது. வாய் பேசாது இல்லாமல், அறிக்கையாக இல்லாமல் நீதிமன்றத்தில் சந்திக்க தயாராக வந்துள்ளேன்.

டிஆர் பாலு இதற்கு முன்பு நீதிமன்றத்தில் சத்திய பிரமாணம் செய்துள்ளார். அதன் நகலை இன்று கொடுத்தார்கள். அந்த நகலில் பல பொய்களை டிஆர் பாலு சொல்லி உள்ளார். நீதிமன்றத்தின் முன்பு கொடுத்துள்ள சத்திய பிரமாணத்தில் பல பொய்கள் உள்ளன. டி.ஆர்.பாலு 2004 முதல் 2009 வரை ஊழல் செய்ததற்காக தான், 2009ஆம் ஆண்டு அமைச்சரவையில் அவருக்கு இடமில்லாமல் போனது. இதை தெரிவித்ததை கூட அவர் அவதூறு வழக்கில் சேர்த்துள்ளார்.

மு.க.அழகிரி அவர்கள் 2014 ஏப்ரல் மாதத்தில் மதுரையில் டிஆர் பாலு எவ்வளவு ஊழலில் ஈடுபட்டார். எத்தனை கப்பல்கள் வைத்துள்ளார். சேது சமுத்திர திட்டத்தில் எவ்வளவு சம்பாதித்தார். எல்லாம் எனக்கு தெரியும் என முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் மகன் அழகிரி நான் சொன்ன குற்றச்சாட்டை 2014 லையே தெரிவித்தார், அதற்கு இதுவரை அழகிரி மீது எந்த வழக்கையும் டி ஆர் பாலு தொடரவில்லை. அவர் மீது எந்த அவதூறு வழக்கும் போடவில்லை.

சத்திய பிரமாணத்தில் மூன்று நிறுவனத்தில் மட்டும் தான் எனக்கு பங்கு இருக்கிறது. மிச்ச நிறுவனத்தில் இல்லை என்று கூறியுள்ளார். திமுக ஃபைல்ஸ் பாகம் ஒன்றில் தெளிவாக சொல்லி டிஆர் பாலு, அவரது மகன், மருமகள் உள்ளிட்டோர் மொத்தமாக 10,000 கோடி ரூபாய்க்கு சொத்து வந்துள்ளது. இது எல்லாம் எங்கிருந்து வந்தது எனக் கூட கேள்வி எழுப்பி உள்ளோம்

ஆனால், அவருடைய சத்திய பிரமாணத்தில் இதையெல்லாம் மறைத்து அரைகுறையாக, நீதிமன்றத்தை அவமதித்து உள்ளார். பல பொய்களை சத்திய பிரமாணத்தில் தெரிவித்துள்ளார்.

வருகின்ற நாட்களில் பாரதிய ஜனதா கட்சி குறிப்பிட்ட நான் ஏப்ரல் 14ஆம் திமுக ஃபைல் ஒன்றில் சொல்லியிருக்கக்கூடிய ஒரு ஒரு குற்றச்சாட்டுக்கும், நாங்கள் நீதிமன்றத்தில் பதில் கூற கடமைப்பட்டுள்ளோம். இன்று தமிழகத்தில் மூன்றாம் தலைமுறைக்கும், முதல் தலைமுறைக்கும் சண்டை நடக்கிறது. நாட்டினுடைய வேலையை செய்து நாட்டுக்கு நல்லது செய்ய வந்துள்ளார்கள் முதல் தலைமுறைகள். திமுகவின் மொத்த குடும்பமே மூன்றாவது தலைமுறை.

இன்று தமிழகத்தை மாற்ற வேண்டும். ஊழலை எதிர்க்க வேண்டும் என்று நினைப்பவர்கள். எல்லா முதல் தலைமுறையும் எங்களோடு இணைய வேண்டும். இது ஊழலுக்கு எதிரான போராட்டம். ஒன்று இரண்டு நாளில் முடியப்போவதில்லை.
இது முதல் தலைமுறைக்கும், மூன்றாம் தலைமுறைக்கும் நடக்கக்கூடிய யுத்தம். இந்த யுத்தம் இன்னைக்கு நாளைக்கு முடிய போறது அல்ல. பெரிய யுத்தமாக இருக்கும். அதற்கு தயாராக தான் வந்துள்ளேன்.

பாஜக வழக்கறிஞர் மூலமாக டிஆர் பாலு அவர்களது குடும்பத்தினரும் சம்பந்தப்படுத்த வேண்டும் என்று கேட்கப் போகிறோம். ஃதிமுக பைல்ஸ் பாகம் ஒன்றில் டிஆர் பாலு அவர்களது குடும்பத்தினர் பெயரும் வைத்துள்ளோம். டிஆர்பி ராஜா அவரது மகன் ராஜ்குமார் உட்பட அனைவரும் எந்த குடும்பத்தையும் அரசியல் மன்றத்தில் இருக்க வேண்டும் என்பது எங்களது நோக்கம் அல்ல. அதனால்தான், டிஎம்கே பார்ட் 1ல் அவர்களது புகைப்படங்களை வைக்கவில்லை. ஆனால், அவரை சத்யபிரமாணத்தில் எதுவும் இல்லை என்று சொல்லி உள்ளார். அதனால், அவரது குடும்பத்தினரை நீதிபதியிடம் முறையிட்டு அழைக்க உள்ளோம்.

டிஆர் பாலு குடும்பம் மொத்தமும் கூண்டில் ஏற வேண்டும். எங்களுடைய கேள்விகளுக்கு அவர்கள் பதில் சொல்ல வேண்டும். அவர்களுடைய கேள்விகளுக்கு நாங்கள் பதில் சொல்லுவோம். இந்தப் போராட்டம் தொடர்ந்து நடக்கும். ஆகஸ்ட் மாதம் 3வது வாரத்தில் மீண்டும் ஆஜராக உள்ளேன். அப்பொழுது நடைபயணத்தில் இருப்பேன். இதற்காக ஒரு நாள் ஒதுக்கி நீதிமன்றத்தில் ஆஜராகுவேன். நாங்கள் எந்த அமைச்சரையும் போல நள்ளிரவில் நெஞ்சுவலி வந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு செல்லக்கூடியவர்கள் இங்கு யாரும் இல்லை. எல்லா கேள்விகளுக்கும் பதில் சொல்லுவோம்.

திமுக பாகம் 2 தயாராக உள்ளது. அது பினாமி சொத்துக்கள் கிட்டத்தட்ட பினாமிகளின் பெயரே 300க்கு மேல் வருகிறது. வினாமிகளின் பெயரை பொதுவெளியில் வெளியிடுவதால் இல்லை. ஆளுநரிடம், டிஎஸ்பி அல்லது பொதுவாக கொடுப்பதா என்று யோசித்து வருகிறோம். சிபிஐக்கு மாநில அரசு கொடுத்திருக்கக் கூடிய அந்தஸ்தை மாநில அரசு எடுத்து விட்டது. நம் முதல்வர் ஸ்டாலின் அவர்கள் மீதும் சிபிஐயில் புகார் கொடுத்துள்ளோம். இப்போது சிபிஐ எடுத்து விட்டால் நாம் தப்பித்து விடலாம் என முதல்வர் எண்ணிக் கொண்டு உள்ளார்.

எப்படி இருந்தாலும் திமுக பைல்ஸ் பாகம் இரண்டு பாதையாத்திரைக்கு முன்பு வெளியிட வேண்டும் என்பதே எங்களது நோக்கம், பல வினாமிகள் தமிழகத்தில் முக்கிய பொறுப்புகளில் உள்ளார்கள். அது நிச்சயமாக நடக்கும் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை பாதயாத்திரை நடக்க நடக்க பார்ட் 3 பார்ட் 4 வெளியாகும். திமுக ஃபைல்ஸ் பாகம் இரண்டில் உள்ள பினாமிக்கல் பெயர்கள் எல்லாமே அவர்களுக்கு ரத்த சொந்தத்தில் அதற்கான புகைப்பட ஆதாரங்கள் உள்ளது.

பினாமிகள் பெயரை சொல்லலாமா..? வேண்டாமா..? என எங்களது வழக்கறிஞர் குழு முடிவு எடுப்பார்கள். பாதயாத்திரைக்கு முன்பு இதை நிச்சயமாக செய்து காட்டுவோம். பினாமியில் வந்துள்ள அனைவருமே புதிய அமைச்சர்கள் தான், அதிலும் அதிமுகவிலிருந்து திமுகவில் வந்தவர்கள் தான் பாகம் இரண்டில் உள்ளார்கள், என தெரிவித்துள்ளார்.

  • actor sugumaran illegal relationship திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றிய காதல் பட நடிகர்…காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்த துணை நடிகை..!
  • Views: - 504

    0

    0