அந்த கட்சியோட ஆதரவோட தான் பெண்களை சீண்டராறு.. வைரமுத்தை வெளுத்து வாங்கிய பிரபலம்..!

Author: Vignesh
14 July 2023, 2:30 pm

பிரபல பாடகியும், டப்பிங் கலைஞருமான சின்மயி, நடிகரும் இயக்குனருமான ராகுல் ரவீந்திரனை 2014-ல் திருமணம் செய்து கொண்டார். ரவீந்திரன் வணக்கம் சென்னை படத்தில் இரண்டு கதாநாயகர்களில் ஒருவராக நடித்திருப்பார்.

chinmayi vairamuthu-updatenews360

சமூக வலைதளங்களில் அடிக்கடி சர்ச்சையான கருத்துகளால் ரசிகர்களின் கவனம் ஈர்ப்பவர் தான் பாடகி சின்மயி. தனது முதல் பாடலிலேயே சிறந்த பாடகி என்ற முத்திரையை பதித்தார் சின்மயி, அடுத்தடுத்து பல படங்களில் ஏ.ஆர் ரஹ்மான் இசையில் தொடர்ச்சியாக பாடல்களை பாடினார். இசைத் துறையில் தனக்கென தனி முத்திரை பதித்துள்ளார்.

chinmayi vairamuthu-updatenews360

இதனிடையே, பாடலாசிரியர் வைரமுத்து தன்னிடம் பாலியல் ரீதியாக தவறாக நடக்க முயன்றதாக குற்றம் சாட்டியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தொடர்ந்து வைரமுத்துவிற்கு எதிரான கருத்துக்களை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார் சின்மயி.

chinmayi vairamuthu-updatenews360

பலமுறை வைரமுத்து குறித்து மோசமான கருத்துக்களை சோசியல் மீடியா பக்கத்தில் பதிவிட்டு அவரை திட்டியுள்ளார். இந்நிலையில், சின்மயிடம் செய்தியாளர்கள், அப்போதே சொல்லி இருக்கலாமே என்றும் அவரை திருமணத்திற்கு அழைத்து அவரிடம் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்க வேண்டிய அவசியம் என்ன என்றும் கேள்வியை எழுப்பிய நிலையில், பெரிய அரசியல் பலம் வைரமுத்துவிடம் இருந்ததால் அதை அப்போது கூற முடியவில்லை என்று சின்மயி பதிலளித்து இருந்தார். சின்மயிக்கு பிறகு தான் பல நடிகைகள் மீ டூ மூலம் தங்களுக்கு நடந்த பாலியல் தொல்லைகளை வெளியில் கூறி வந்தது குறிப்பிடத்தக்கது.

singer chinmayi - updatenews360

இந்நிலையில், வைரமுத்துவின் பிறந்தநாளுக்கு தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் வாழ்த்து கூறியிருந்தது கொடுமையாக இருக்கிறது என்றும், மேலும் 2018ல் தனக்கு திரைதுறையில் பல தடைகள் போடப்பட்டதால் ஐந்தாண்டுகள் பல தடைகளை சந்தித்து போராடி வருவதாகவும், பாலியல் ரீதியாக பல பெண்களை அச்சுறுத்திய ஒருவர் வைரமுத்து என்றும், அவர் திமுகவினர் துணையுடன் பெண்களை மிரட்டி வருவதாகவும், திமுகவினரை கண்டு பெண்கள் பயப்படுவதாகவும், அரசியல்வாதிகள் பெண்களின் பாதுகாப்பாக பேசுவதாக கூறிக் கொள்வது அவமானம் என்றும், வைரமுத்துவைப்பற்றி பேசினால் அனைவரும் அமைதியாகிவிடுவார்கள்.

வயிறு எரியுது இதுதான் நமது பலாத்கார மன்னிப்பு கலாச்சாரம் என்று கடுமையாக தாக்கி சின்மயி ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 274

    0

    0