முதல் பெண் தானே நீதானே…. தாலியோடு வந்து PROPOSE செய்த தீவிர ரசிகை – பதறிப்போன அசோக் செல்வன் (வீடியோ)

Author: Shree
14 July 2023, 6:50 pm

நடிகர் அசோக் செல்வன் சூது கவ்வும், தெகிடி, ஓ மை கடவுளே, நித்தம் ஒரு வானம் என போன்ற நல்ல படங்களை தேர்ந்தெடுத்து நடித்து பிரபலமான நடிகராக அறியப்பட்டார். இவரது சினிமா கெரியர் பில்லா 2 படத்தில் தான் ஆரம்பித்தது. அதன் பிறகு தெகிடி திரைப்படத்தின் மூலம் அனைவரது கவனத்தையும் ஈர்த்தார்.

தொடர்ந்து ஆரஞ்சு மிட்டாய், சவாலே சமாளி, 144 , கூட்டத்தில் ஒருத்தன் , முப்பரிமாணம் , உள்ளிட்ட படங்களில் நடித்து பெரிதாக வரவேற்புகள் கிடைக்காமல் மார்க்கெட் இழந்தார். அதன் பிறகு ஓ மை கடவுளே திரைப்படம் அவருக்கு மாபெரும் ஹிட் கொடுத்தது.

அந்த படத்தில் நடித்த நடிகை ரித்திகா சிங்குடன் அவர் கிசுகிசுக்கப்பட்டார். இருவரது கெமிஸ்ட்ரியும் படத்தில் நன்றாக ஒர்கவுட் ஆகியிருந்தது. இவர்கள் நிஜத்தில் காதலித்தால் கூட சிறந்த ஜோடியாக இருப்பார்கள் என ரசிகர்கள் விருப்பம் தெரிவித்தனர்.

இந்நிலையில் சமீபத்தில் பிரபல யூடியூப் சேனல் ஏற்பாடு செய்த ரசிகர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் அஷோக் செல்வனை சந்திக்க தீவிர ரசிகை ஒருவர் சொந்த ஊரில் இருந்து கிளம்பி வந்து தாலி கொடுத்து காதல் ப்ரொபோஸ் செய்தார். ஒரு நிமிஷம் அசோக் செல்வன் ஜர்க் ஆகி நின்றுவிட்டார். பின்னர் நான் உங்களுக்கு பிடித்த மீன் குழம்பு உங்களுக்காக செய்ய கற்றுக்கொண்டேன். நீங்கள் பேட்டி ஒன்றில் நன்றாக தமிழ் பேசும் பெண்ணை தான் திருமணம் செய்வேன் என கூறியிருந்தீர்கள். நான் நன்றாக கொங்கு தமிழ் பேசுவேன் என என்னை கட்டிக்கோங்க என கூறினார். பின்னர் அசோக் செல்வன் அவருடன் காஃபி டேட் செல்ல ஒப்புக்கொண்டார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

https://www.youtube.com/watch?v=8rDf6Jdare4
  • goundamani does not eat in home said by bayilvan கவுண்டமணியிடம் இருந்த மர்மம்? அந்த சாப்பாட்டுல என்ன இருக்கு? பின்னணியை உடைத்த பிரபலம்…