திருநங்கையை திருமணம் செய்த திருநம்பி… அறநிலையத்துறைக்கு சொந்தமான கோவிலில் அரங்கேறிய ட்விஸ்ட்!!

Author: Udayachandran RadhaKrishnan
15 July 2023, 1:17 pm

திண்டுக்கல் மாவட்டத்தில் முதன்முறையாக திருநங்கைக்கும், திருநம்பிக்கும் திருமணம் நடைபெற்றது.

திண்டுக்கல் மாவட்டத்தில் முதன்முறையாக திருநங்கைக்கும், திருநம்பிக்கும் அபிராமியம்மன் கோவிலில் திருமணத்தை திருநங்கைகள் நடத்தி வைத்தனர்.

திண்டுக்கல் வேடபட்டியைச் சேர்ந்த மணிகண்டன். வயது (21). இவர் பெண்ணாக மாறினார். பின்னர் தனக்கு மாயா என்று பெயர் மாற்றிக்கொண்டார்.

இதே போல் மதுரை மாவட்டம் தல்லாகுளம் பகுதியைச் சேர்ந்தவர் உமாமகேஸ்வரி. வயது (24). இவர் ஆணாக மாறினார். பின்னர் தனக்கு கணேஷ் என்று பெயர் மாற்றிக்கொண்டார்.

இவர்கள் இருவருக்கும் திருநங்கையர்கள் திருமணம் செய்ய நிச்சயித்தனர். அதன்படி வெள்ளியன்று காலை திண்டுக்கல் அபிராமியம்மன் கோவிலில் உள்ள விநாயகர் சன்னதியில் திருநங்கையர்களால் இந்த முறைப்படி தாலிகட்டி திருமணம் நடத்தி வைக்கப்பட்டது.

கோவிலுக்கு வந்த பக்தர்கள் இவர்களது திருமணத்தைக் கண்டு ஆச்சரியப்பட்டனர் வியப்படைந்தனர். பின்பு இவர்களது திருமணத்திற்கு பொதுமக்கள் அனைவரும் கூடி அச்சதை தூவி வாழ்த்தினர்.

இந்த திருமணம் பொதுமக்கள் மற்றும் திருநங்கையர்கள் மத்தியில் விமர்சியாக நடைபெற்றது. அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த கோவிலில் இவர்களது திருமணத்தை அறநிலையத்துறையைச் சார்ந்தவர்களோ, அர்ச்சகர்களோ பங்கேற்கவில்லை. இந்த திருமணமானது பதிவு செய்யப்படாமல் நடத்தப்பட்டது.

  • ajith kumar asking for script to bala but bala did not give Full Script கொடுக்க மாட்டேன்- அஜித்தின் முகத்துக்கு நேராக சொன்ன பிரபல இயக்குனர்…