வடகோவை – சபரிமலை…. இரு முடி கட்டி பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் யாத்திரை!!

Author: Udayachandran RadhaKrishnan
16 July 2023, 5:23 pm

ஆடி அமாவாசையை ஒட்டி சபரிமலை ஐயப்பன் கோவில் நடை இன்று திறக்கப்படுகிறது. இன்று முதல் 5 நாட்களுக்கு சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறந்திருக்கும்.

இன்று மாலை நடை திறக்கப்படும் நிலையில் நாளை காலை முதல் பக்தர்கள் அனுமதிக்கப்படுவர். வரும் 21-ந் தேதி இரவு 10 மணியுடன் கோவில் நடை சாத்தப்படும்.

இதனையடுத்து ஆடி மாதம் ஐயப்பன் கோவிலுக்கு செல்வோர் மாலை அணிந்து இருமுட்டி யாத்திரை செல்கின்றனர். கோவையில் பாஜக பெண் எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் 10 பேர் கொண்ட குழுவினருடன் சபரிமலை யாத்திர புறப்பட்டார்.

வடகோவை ஐயப்பன் கோவிலில் வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ உள்ளிட்ட 10 பேர் இன்று இருமுடி கட்டி யாத்திரை புறப்பட்டுச் சென்றனர். முன்னதாக நடைபெற்ற பூஜையில் ஏராளமான பக்தர்கள், பாஜக தொண்டர்கள் பங்கேற்றனர்.

தமது சபரிமலை யாத்திரை குறித்து பதிவிட்டுள்ள வானதி சீனிவாசன், வடகோவை ஸ்ரீ ஐயப்பன் கோவிலில் இருந்து இருமுடி கட்டி சபரிமலை யாத்திரைக்கு புறப்பட்டோம்.

இப்புனித பயணத்தில் ஹிந்துஸ்தான் கல்லூரியின் நிர்வாக அறங்காவலர் திருமதி.சரஸ்வதி கண்ணையன் அவர்களின் குடும்பத்தாரும், கொங்குநாடு கல்லூரியின் தலைவர் திருமதி.வாசுகி அவர்களும் கலந்துகொண்டனர் என தெரிவித்துள்ளார்.

  • SAWADEEKA song meaning அட”SAWADEEKA”அர்த்தம் இதுதானா…பங்கம் செய்துள்ள அனிருத்…செம VIBE-ல் அஜித் ரசிகர்கள்..!
  • Views: - 344

    0

    0