அந்த கெட்ட பழக்கத்தில் இருந்து ரஜினியை மீட்ட மனைவி – இன்று வரை நன்றி சொல்லும் சூப்பர் ஸ்டார்!
Author: Shree16 July 2023, 5:52 pm
தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்திற்கு தற்போது 72 வயது ஆகிறது. இன்னுமும் ஸ்லிம் பிட் தோற்றத்தை வைத்து மாஸ் ஹீரோவாக திரைப்படங்களில் நடித்து வருகிறார். அவருக்கு அடித்து எத்தனை இளம் நடிகர்கள் வந்தாலும் கனவில் கூட சூப்பர் ஸ்டார் இடத்தை நிரப்பவே முடியாது. தற்போது நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் ஜெயிலர் படத்தில் நடித்துள்ளார்.
இந்நிலையில் ரஜினி தனது மனைவி லதா ரஜினிகாந்த் குறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் அதீத காதல் அன்போடு பேசியுள்ளார். அதாவது எனக்கு ஆரம்ப காலத்தில் நிறைய கெட்டபழக்கங்கள் இருந்தது. தினமும் தண்ணி அடிப்பேன், பாக்கெட் கணக்கில் சிக்ரெட் பிடிப்பேன் இதெல்லாம் என்னுடைய உடலை கொஞ்சம் கொஞ்சமாக கெடுத்தது. பின்னர் பல படங்களில் ஸ்டைலுக்காகவே சிக்ரெட்டை தூக்கிப்போட்டு பிடிப்பேன் அதையெல்லாம் வயது வித்தியாசமின்றி மக்கள் ரசித்தார்கள்.
ஆனால், அந்த அத்தனை கெட்ட பழக்கங்ககளில் இருந்தும் என்னை மீட்டெடுத்துவர் என்னுடைய மனைவி லதா தான், என் மனைவியின் அன்பாலும், நல்ல மருத்துவர்களின் சிகிச்சையாலும் தான் இன்று நான் ஆரோக்கியமாக இருக்கிறேன் என்று வெளிப்படையாக கூறியிருக்கிறார். அதற்காக தன்னை லதாவிடம் அறிமுகம் செய்து வைத்தத நடிகர் ஒய்.ஜி.மகேந்திரனுக்கு இன்றுவரை நன்றி சொல்கிறாராம் ரஜினிகாந்த்.