அம்மா முன்னாடி.. ஸ்ரேயாவை கதற கதற.. ஈகோவை சீண்டியதால் பதிலடி கொடுத்த பிரபலம்..!
Author: Vignesh18 July 2023, 10:30 am
தமிழ் சினிமாவின் ரசிகர்களை மௌனம் பேசியதே படத்தின் மூலம் ஈர்த்தவர் தான் அமீர். அதன்பின் ராம், பருத்திவீரன், ஆதிபகவன் போன்ற படங்களை இயக்கி முன்னணி இயக்குனர்களின் பட்டியலில் இணைந்தார். இவர் யோகி என்ற படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். வெற்றிமாறன் இயக்கத்தில் உருவான ‘வடசென்னை’ படத்தில் நடித்து பலரின் பாராட்டுக்களையும் பெற்றார்.
இந்த நிலையில், கொஞ்சம் கறாரான ஆளான அமீர் தற்போது நடிப்பிலும் கவனம் செலுத்தி வருகிறார். தனக்கு வேலை ஆகவில்லை என்றால் யார் என்று கூட பார்க்காமல் கடுமையாக திட்டிவிடும் குணம் கொண்டவர் அமீர் என்பது அனைவரும் அறிந்த விஷயமே.
அந்த வகையில், பிரபல பாடகி அமீரிடம் கடுமையாக திட்டு வாங்கி கதற கதற தேம்பித் தேம்பி அழுது இருக்கிறார். அதாவது கார்த்திக் மற்றும் பிரியாமணி நடித்த சூப்பர் ஹிட் படமான பருத்திவீரன் படத்தில் அய்யய்யோ என் உசுருக்குள்ள என்ற பாடலை ஸ்ரேயா கோஷல் பாடியிருந்தார்.
அந்தப் பாடலுக்காக கமிட்டான ஸ்ரேயா கோஷலுக்காக இரண்டு வாரங்கள் அமீர் காத்திருந்துள்ளார். மும்பையில் இருந்து வந்த இசையமைப்பாளர்களின் பாடலை பாடி கொடுத்துவிட்டு தான் அமீரின் படத்தின் பாடலை ரெக்கார்டிங் செய்ய வந்திருக்கிறார் ஸ்ரேயா.
அந்த சமயத்தில் பல பாடல்களை பாடியதால் சோர்வாக இருக்கிறேன் என்று அமீரிடம் ஸ்ரேயா கோஷல் தெரிவித்து இருக்க அதற்கு அமீர், அதெல்லாம் என் பிரச்சனை கிடையாது என்றும், இன்றே பாடி கொடுத்தாக வேண்டும் என்று கறாராக தெரிவித்துள்ளார்.
இதற்காக இரண்டு வாரங்கள் அமீர் காத்திருந்ததால் இனிமேலும் சாக்குபோக்கு சொன்னால் டென்ஷனாகி விடுவார் என்று ஒரு வழியாக ஸ்ரேயா பாடியும் கொடுத்து உள்ளார். அந்த சமயத்தில் அந்த பாடல் அமீருக்கு திருப்தி இல்லையாம். அந்த பாடலை ஒன்பதாம் வகுப்பை இரண்டு வருடங்களாக படிக்கும் முத்தழகு தான் பாடுகிறார் ஸ்ரேயா கோஷல் கிடையாது என்று கடுமையான சொற்களைக் கூறி ஸ்ரேயாவை திட்டியுள்ளார் அமீர்.
அமீர் கடுமையாக திட்டியதால் ரூமில் தேம்பித் தேம்பி அழுதுள்ளார் ஸ்ரேயா. இதனை பார்த்த அவரது அம்மா மேனேஜரிடம் எதற்காக என் குழந்தையை இப்படி கஷ்டப்படுத்துகிறீர்கள் என்று கேட்டுள்ளார். உடனே அமீர் எனக்கு வேண்டியது கிடைத்தே ஆக வேண்டும் எதற்கும் பொறுத்துப் போக முடியாது என்றும், ஸ்ரேயா கோஷலுக்கு வேண்டுமானால் சம்பளத்தை வாங்கிக்கொண்டு அவரைப் போக சொல்லுங்கள் நான் வேறு ஒருவரை வைத்து பார்த்துக் கொள்கிறேன் என்று திட்டவட்டமாக கூறிவிட்டார். உடனே தலைக்கேறிய ஈகோவால் தன் திறமையை காட்டி அப்பாடலை பாடி முடித்துக் கொடுத்துள்ளார் ஸ்ரேயா. பாடல் வெளியாகி சூப்பர் ஹிட் ஆனது குறிப்பிடத்தக்கது.