என்னை தொட முடியாததால் சூழ்ச்சி… பொண்டாட்டி சண்டையில் தலையிட்டு என்னை மிரட்டுறாங்க ; மேடையில் வேல்முருகன் பரபர பேச்சு..!!

Author: Babu Lakshmanan
18 July 2023, 1:41 pm

வேல்முருகன் மீது எதிலும் கை வைக்க முடியாது என நினைத்துக் கொண்டு, தற்போது எனது குடும்ப பிரச்சினையில் வந்து தலையிட்டு வருவதாக தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார்.

கனிமவள கொள்ளைக்கு எதிராக கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பில் கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் தலைவர் சட்டமன்ற உறுப்பினர் வேல்முருகன் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார்.

அப்போது அவர் பேசியதாவது ;- அமெரிக்க பன்னாட்டு கம்பெனிகளுக்கு உதவுவதற்காக தாமிரபரணி ஆற்று தண்ணீரை உறிஞ்சி, அதன் மூலம் பெப்சி. கோக் உள்ளிட்ட குளிர்பானங்கள் தயாரித்து பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அரசுக்கு செலுத்த வேண்டியதை 1 லிட்டருக்கு 1 பைசா என கொடுத்தால் போதும். தமிழகத்தில் எங்கு பார்த்தாலும் கஞ்சா, அபின், போதை சாக்லேட் அதுமட்டுமா சர்வதேச அளவில் ஹெராயின் கடத்தல் நடந்து வருகிறது.

லாட்டரி விற்று பணம் சம்பாதிக்க கூடாது. அதேபோன்று கஞ்சா விற்று அந்த பணத்தை சம்பாதிக்க கூடாது. அது மட்டுமா மக்களை குடிகாரர்கள் ஆக்கி அதன் மூலம் பெண்களை விதவைகளாக்கி, அதில் கிடைக்கும் பணத்தின் மூலம் சம்பாத்தியம் என்பது இந்த அரசுக்கு தேவையா..? என்னைப் பொருத்தவரை எனக்கென ஒரு வரைமுறை கட்டுப்பாடு ஒழுக்கம் ஆகியவற்றை கொண்டுள்ளேன்.

இதையெல்லாம் பார்த்த ஒரு கூட்டம் வேல்முருகன் மீது எதிலும் கை வைக்க முடியாது என நினைத்துக் கொண்டு, தற்போது எனது குடும்ப பிரச்சினையில் வந்து தலையிட்டு வருகிறார்கள். தமிழக மக்களின் ஜீவாதார பிரச்சனைகளுக்காக இந்த இயக்கம் தொடர்ந்து உழைத்துக் கொண்டு வருகிறது. மண்ணை நேசிக்க, மக்களை நேசிக்க, தமிழ் மொழியை நேசிக்க, தமிழ் விடுதலை நேசிக்க, இந்த இயக்கம் தொடர்ந்து பாடுபட்டு வருகிறது.

தற்போது சினிமா நடிகர்கள் அரசியலுக்கு உலா வரும் காலம் வந்து கொண்டிருக்கிறது. நான் ஒன்றும் சூப்பர் ஸ்டார் அல்ல. உலகநாயகன் அல்ல. சாதாரண முந்திரி காட்டில் விவசாய குடும்பத்தில் பிறந்தவன் தான் இந்த வேல்முருகன். எங்கே என தெரியாமல் இருந்த சினிமா,நடிகை நயன்தாராவை செல்போனில் படம் எடுக்க ஒரு கூட்டம் உலவி கொண்டிருக்கிறது. அந்த அளவுக்கு சினிமா நடிகர்கள் மீதும், நடிகைகள் மீதும் இளைஞர்களுக்கு மோகம் வந்துவிட்டது, என்றும் அவர் பேசினார்.

  • dhanush paid 25 lakhs hospital bill for his director illness நிஜமாகவே கர்ணன்தான்!… தன்னை வைத்து இயக்கிய இயக்குனருக்கு மாபெரும் உதவி செய்த தனுஷ்…