சிவாஜியிடம் ரெண்டாவது டேக் கேட்க நடுங்கிய கமல் ஹாசன்… தேவர் மகன் படத்தின் சுவாரஸ்யம்!

Author: Shree
18 July 2023, 1:57 pm

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் கமல் ஹாசன் இணைந்து நடித்த திரைப்படம் தேவர் மகன். இப்படம் 1992 ஆம் ஆண்டு தீபாவளி நாளில் வெளிவந்து மாபெரும் ஹிட் அடித்தது. இந்த படம் 1992ல் 5 தேசிய விருதுகளை வென்றது. மேலும் ஆஸ்கார் விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்டது

இப்படத்தில் கௌதமி , ரேவதி , நாசர், வடிவேலு உள்ளிட்ட பல நடித்திருந்தார்கள். இப்படத்தில் மேலாதிக்க சாதியை வைத்து எடுக்கப்பட்ட திரைப்படம் என இன்றும் பல விவாதங்களில் பேசப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. இப்படத்தின் இரண்டாம் பாகத்திற்கான முயற்சிகள் கூட மேற்கொள்ளப்படுவதாக செய்திகள் வெளியானது.

இந்நிலையில் இப்படத்தை குறித்த அனுபவத்தை தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பகிர்ந்துக்கொண்ட கமல் ஹசான். ஒரு காட்சியில் சிவாஜியின் நடிப்பு அவ்வளவு சரியாக பொருத்தமாக இல்லை. இன்னும் நன்றாக நடிக்கவேண்டும்… இது நல்லா இல்லை என படத்தின் இயக்குனர் பரதன் கமல் ஹாசனிடம் சொன்னாராம்.

அதற்கு கமல் யோவ்… என்ன சொல்ற ? அவருகிட்ட போயி நல்லா இல்லன்னு எப்படி சொல்லமுடியும்? சொல்லணுமே எனக்கு பிடிக்கல என பரதன் சொல்ல நான் திட்டிவிட்டேன். யோவ் போயா… வெளியூரில் இருந்துவந்துவிட்டு எங்க ஆளுகிட்ட அதெல்லாம் சொல்லக்கூடாது என சொன்னேன்.

நாங்கள் இங்கு பேசிக்கொண்டிருந்தது பார்த்த சிவாஜி என்ன ஏதோ முணு மூணுன்னு பேசிகிட்டு இருக்கீங்க. என்னவென்று சொல்லுங்க என கேட்டார். அதற்கு ஒரு நிமிஷம் எல்லோரும் சைலண்டா இருந்தோம். பின்னர் நல்லா இல்லையா? என கேட்டதும் பரதன் ஆமாம் என கத்திவிட்டார்.

அதன் பின்னர் பெரிய தேவர் மாதிரி இல்லை சின்ன தேவர் மாதிரி இருக்கு எங்களுக்கு பெரிய தேவர் வரணும் என கேட்க சிவாஜி…. ஓஹ்… அப்படியா… வருவாரு போங்க என சொல்லிவிட்டு மீண்டும் நடித்து வாயடைக்க வைத்தார். தேவர் மகன் படத்தின் இந்த ஸ்வாரஸ்யமான தகவல் தற்போது வைரலாகி வருகிறது.

  • Kudumbasthan Movie Blockbuster Hit பட்டையை கிளப்பும் குடும்பஸ்தன்…அதுக்குள்ள சின்னத்திரையில்.. வெளியான மாஸ் அறிவிப்பு..!!