மூடி வெச்ச பலூன் போல உப்பிருக்கு கன்னம்… கவர்ச்சி ரூட்டை கையில் எடுத்த இனியா..!
Author: Vignesh19 July 2023, 11:00 am
தமிழில் திரையுலகில் வாகை சூட வா என்னும் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் தான் நடிகை இனியா. முதல் திரைப்படத்திலேயே சிறந்த நடிப்புக்காக பல விருதுகளை வாங்கி அனைவரின் கவனத்தையும் பெற்றார்.
அதைத் தொடர்ந்து அவர் பல திரைப்படங்களில் குடும்பப்பாங்கான வேடங்களில் நடித்து வந்தார்.
ஆனால் ஒரு கட்டத்திற்குப் பிறகு அவருக்கு சினிமாவில் அவ்வளவாக வாய்ப்புகள் கிடைக்காததால், சென்னையில் ஒரு நாள், நான் சிகப்பு மனிதன் உள்ளிட்ட திரைப்படங்களில் வில்லியாக நடித்தார். அதன் பிறகு சினிமாவில் தனக்கு படவாய்ப்புகள் கிடைக்கும் என்று நம்பிய இனியாவுக்கு ஏமாற்றம்தான் கிடைத்தது.
இதனையடுத்து சன்டிவியில் கண்ணான கண்ணே என்ற சீரியலில் கௌரவ தோற்றத்தில் நடித்தார். அதுபோக சமீபத்தில் நடிகர் விமல் நடிப்பில் வெளியான விலங்கு என்ற வெப் தொடரில் இனியா அவருக்கு மனைவியாக நடித்திருந்தார்.
இதில் அவருடைய நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டது.
இந்த நிலையில் தனக்கு தெரிந்த இயக்குனர்களிடம் எல்லாம் அவர் கவர்ச்சியாக நடிப்பதற்கு தயார் என்று வாய்ப்பு கேட்டு வருகிறாராம். கவர்ச்சியை கையிலெடுக்கும் இவருடைய இந்த முயற்சி அவருக்கு எதிர்பார்த்த பலனைத் தருமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.