சுருங்கிய கன்னம்.. மேக்கப் இல்லாத புகைப்படம்.. நொறுங்கிப்போன சிம்ரன் ரசிகர்கள்.. !
Author: Vignesh20 July 2023, 7:30 pm
ஒல்லி பெல்லி இடுப்பழகியாக ஒட்டுமொத்த தென்னிந்திய சினிமாவையும் தன் இடுப்பசைவால் ஆட்டி படைத்தவர் நடிகை சிம்ரன். மும்பை பஞ்சாபி குடும்பத்தில் பிறந்து வளர்ந்த இவர் நிகழ்ச்சி தொகுப்பாளராக சினிமாத்துறையில் அறிமுகமானார்.
1995-இல் அவர் நடித்த முதல் படமான சனம் பெருந்தோல்வியை அடைந்தது. அதன் பின்னர் இந்தியை தவிர மற்ற மொழிகளில் கவனம் செலுத்தி மலையாளத்தில் மம்முட்டியுடன் இந்திரபிரஸ்தம், கன்னடத்தில் சிவராஜ்குமாருடன் சிம்ஹடா மாரி படத்திலும் அப்பாய் காரி பெல்லி என்ற தெலுங்குப் படத்திலும் நடித்தார்.
தமிழில் 1997 ஆம் ஆண்டு ஒன்ஸ்மோர் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். இங்கு முதல் படமே சூப்பர் ஹிட் அடித்தது. பின்னர் நேருக்கு நேர், துள்ளாத மனமும் துள்ளும், வாலி, ஜோடி, பிரியமானவளே, பஞ்சதந்திரம், கன்னத்தில் முத்தமிட்டால், வாரணம் ஆயிரம் என பல்வேறு ஹிட் படங்களில் நடித்தார்.
பின்னர் தீபக் பக்கா எனபவரை திருமணம் செய்துக்கொண்டு செட்டில் ஆனார். இவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இந்நிலையில், 47 வயதாகும் சிம்ரன் முகம் சுருங்கி மேக்கப் இல்லாத புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
Stay strong and never surrender ??#NeverGiveUp #KeepGoing pic.twitter.com/2JGJ5heDdO
— Simran (@SimranbaggaOffc) July 18, 2023