அப்பாவின் மானத்தை காற்றில் பறக்க விட்ட வாரிசு நடிகைகள்.. அதுல இவங்க கொஞ்சம் ஓவரா தான் போயிட்டாங்க..!

Author: Vignesh
20 July 2023, 5:10 pm

தமிழ் சினிமாவில் சமீப காலமாக நெப்போடிசம் பிரச்சினை அதிகரித்துக் கொண்டே வருகிறது. பாலிவுட்டில் தான் அப்படி என்றால் கோலிவுட்டிலும், தற்போது வாரிசு நட்சத்திரங்கள் அதிகரித்து வருகிறார்கள். அப்படி நடிகைகளாக அறிமுகமாகும் நடிகர்களின் மகள்களால் மொத்த பெயரையும் காற்றில் பறக்க விட்டு இருக்கிறார்கள் டாப் நடிகர்கள். அப்படி அப்பா பேச்சை கேட்காத நடிகைகள் யார் என்று இந்த பதிவில் பார்ப்போம்.

வனிதா விஜயகுமார்

நடிகர் விஜயகுமார் மற்றும் மஞ்சுளாவின் மகள்கள் அனைவரும் சினிமாவில் அறிமுகமாகினார்கள். அதில், வனிதா விஜயகுமார் காலப்போக்கில் குடும்பத்திற்கே எதிரியாக மாறிவிட்டார் என்று சொல்லலாம். மூன்று திருமணம் செய்து விவாகரத்து பெற்றார். அதன் பின்னர், பிக் பாஸ், குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு சென்று வந்தார். அதிலும், வனிதாவின் வாய்ப்பேச்சால் பல வெறுப்பையும் சம்பாதித்து வந்தார் என்று சொல்லலாம்.

சுருதிஹாசன்

உலக நாயகன் மகளாக சினிமாவில் அறிமுகமானவர்தான் சுருதிஹாசன். இவர் ஆரம்பத்திலிருந்து சர்ச்சையில் சிக்கினார். பல முன்னணி நடிகர்களுடன் காதல் கிசுகிசுவில் சிக்குவதை வழக்கமாக வைத்து இருந்தார். அதன்பின் வெளிநாட்டு நபருடன் ஊர் சுற்றி லிவிங் டு கெதர் வாழ்க்கை வாழ்ந்து அதன் பின்னர் பிரிந்து தற்போது, சாந்தனு என்பருடன் மீண்டும் லிவிங் வாழ்க்கை வாழ்ந்து வருகிறார். சமீபத்தில் இவர் 21 வயதில் அப்பா வீட்டை விட்டு வெளியேற்றியதன் பின்னர் தன் பொருளாதாரத்தை தானே பார்த்து வருவதாகவும் கூறினார். எப்போதும் ஆக்டிவாக இருந்து தனது காதலனிடம் திருமணமாகாமல் தனிமையில் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.

shruti haasan - updatenews360

ராதிகா

நடிகர் ராதாவின் ஐந்தாவது மனைவியாக இலங்கைப் பெண் கீதா என்பவர் மூலம் பிறந்தவர் தான் நடிகை ராதிகா. அப்பனுக்கு தப்பாமல் பிறந்த குழந்தை என்று இவரை சொல்லலாம். அப்பாவை போல் மூன்று திருமணம் செய்து அப்பாவிற்கு தப்பாமல் இருந்து வருகிறார். இவர் சரத்குமாரை திருமணம் செய்து ராகுல் என்ற மகனையும் ராதிகா பெற்றிருக்கிறார்.

வரலட்சுமி

வரலட்சுமி போடா போடி என்ற படத்தின் மூலமாக சிம்புக்கு ஜோடியாக அறிமுகமானார். இவர் சரத்குமாரின் மகள். அதன்பின் விஷாலுடன் ஊர் சுற்றி காதலித்து பல்வேறு சர்ச்சைகள் ஏற்பட்ட நிலையில், தான் உண்டு தன் வேலை உண்டு என்று தற்போது இருந்து வருகிறார்.

அதிதி சங்கர்

டாக்டர் படிப்பை முடித்து இயக்குனர் சங்கர் மகள் அதிதி சினிமாவில் விருமன் படத்தின் மூலமாக அறிமுகமானார். இவர் அறிமுகமான முதலே ஆரம்பத்தில் இருந்து பல அலப்பறைகளைக் காட்டி கிரின்ச் செய்து வந்தார். அதிலும், அப்பாவை மீறி தற்போது பல படங்களில் கமிட்டாகி கிளாமர் ரூட்டையும் கையில் எடுத்து அப்பாவின் பெயரை கெடுத்து வருகிறார் அதிதி.

aditi shankar -updatenews360
  • Karthi accident on Sardar 2 set படப்பிடிப்பில் நடிகர் கார்த்திக்கு விபத்து…அவசர அவசரமாக சென்னை திரும்பிய படக்குழு.!