‘விரைவில் நம்ம ஆட்சி வரும் பார்’… நடிகர் விஜய்க்கு டஃப் கொடுக்கும் நடிகர் சூர்யா ரசிகர்கள்.. வைரலாகும் போஸ்டர்!!

Author: Babu Lakshmanan
20 July 2023, 7:36 pm

நடிகர் சூர்யாவை அரசியலுக்கு அழைத்து மதுரை சூர்யா ரசிகர்கள் ஒட்டிய போஸ்டர் வைரலாகி வருகிறது.

நடிகர் விஜய் அரசியலுக்கு வருவதை உறுதி செய்ததை தொடர்ந்து, அவரது ரசிகர்கள் மதுரையில் போஸ்டரிலேயே ஆட்சி நடத்தும் அளவுக்கு போஸ்டர்களை ஒட்டி வருகின்றனர்.

இந்த நிலையில், மதுரை வடக்கு தொகுதி சூர்யா தலைமை நற்பணி இயக்கத்தைச் சேர்ந்த ரசிகர்கள் மதுரை மாநகர் முழுவதிலும் போஸ்டர் அடித்து ஒட்டியுள்ளனர்.

அதில் “உன்ன மாரி ஆட்கள் எல்லாம் அரசியலுக்கு வந்தா, இந்த ஊரு எவ்வளவு நல்லா இருக்கும் விரைவில் நம்ம ஆட்சி வரும் பார்” என தெரிவித்தும் வாசகத்தின் பக்கத்தில் தமிழ்நாடு சட்டமன்றம் முன்பாக நடிகர் சூர்யா பேசுவது போன்ற காட்சி அமைத்து போஸ்டர் அடித்து மதுரை நகர் பகுதியில் ஒட்டியுள்ளனர்.

இந்த போஸ்டர் சமூக வலைதளங்களில் அதிகம் கவனத்தை ஈர்த்துள்ளது.

  • kalanidhi maran office 8th floor was locked for many years கலாநிதி மாறன் அலுவலகத்தில் அமானுஷ்யம்? 8 ஆவது மாடியில் அப்படி என்ன இருக்கிறது?