தீபிகா படுகோனேவுடன் விவாகரத்து?.. ரன்வீர் சிங் வீடியோவால் ஷாக்கில் ரசிகர்கள்..!
Author: Vignesh21 July 2023, 12:30 pm
பாலிவுட்டின் நட்சத்திர ஜோடிகளான ரன்வீர் சிங்கும் தீபிகா படுகோன் இருவரும் 6 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். பின்னர் கடந்த 2018-ஆம் ஆண்டு இத்தாலியில் கோலாகலமாக மிகவும் பிரம்மாண்டமாக திருமணம் செய்துக்கொண்டனர். இந்த திருமணத்தில் பல பிரபலங்கள் கலந்து கொண்டு வாழ்த்தினர். திருமணத்திற்கு பின்னர் மும்பையில் ரன்வீரின் வீட்டில் இருவரும் இணைந்து வாழ்ந்து வருகின்றனர். தொடர்ந்து தீபிகா படுகோன் பல படங்களை கையில் வைத்துக்கொண்டு பிசியாக நடித்து வருகிறார்.
திருமணத்திற்கு பின்னர் கொஞ்சம் கூட கவர்ச்சி குறையாமல் தாராளமாக சுதந்திரமாக நடித்து வருகிறார் தீபிகா படுகோன். அதற்கெல்லாம் அவரது கணவர் தான் சுதந்திரம் கொடுக்கிறார். ரன்வீர் சிங் மிகவும் ஜாலியான டைப் கொண்ட நபர் என்பது நம் எல்லோருக்கும் தெரியும். தீபிகா படுகோனுக்கு ஏற்கனவே பல காதல் தோல்விகள் இருந்துள்ளது. குறிப்பாக அவர் ரன்பீர் கபூரை பல ஆண்டுகள் காதலித்து அவரால் ஏமாற்றப்பட்டார். அந்த சமயத்தில் தீபிகா படுகோன் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி கண்ணீர் விட்டு கதறி அழுத வீடியோக்கள் சமூகவலைத்தளங்களில் செம வைரலாக பரவியது.
அதன் பின்னவர் தீபிகா ரன்வீர் சிங் மீது காதல்வயப்பட்ட பின்னர் தான் மிகவும் சந்தோஷமாக காணப்பட்டார். தற்ப்போது வரை அவரை மகிழ்ச்சியாகவே வைத்திருக்கிறார் ரன்வீர் சிங். இப்படி ஒரு நிலையில் பாலிவுட்டின் சர்ச்சைக்குரிய விமர்சகரான உமைர் சந்து தனது ட்விட்டர் பக்கத்தில், நடிகை தீபிகா படுகோனும் ரன்வீர் சிங்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு தனித்தனியாக வாழ்ந்து வருவதாகவும் அதனால் அவர்கள் விரைவில் விவாகரத்து பெறவுள்ளதாகவும் பதிவிட்டு பரபரப்பை கிளப்பியுள்ளார்.
இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதத்தில் ரன்வீர் சிங் தீபிகாவுக்கு சமீபத்தில் நடந்த பேஷன் ஷோ ஒன்றில் முத்தம் கொடுத்து அவரது பாசத்தை வெளிப்படுத்தி உள்ளார். இந்த வீடியோ தற்போது இணையதளத்தில் வைரல் ஆகி வருகிறது.