காவாலையாவை முடித்த கையோடு கால் கட்டு போட போகும் தமன்னா… எல்லாம் அவங்க சொல்லி தான்..!
Author: Vignesh21 July 2023, 5:30 pm
பிளான் A பிளான் B என்ற இந்தி படத்தில் மூலமாக நடிகை தமன்னா முதன்முதலாக திரை உலகிற்கு அறிமுகமானார். இவர் இந்த படத்தில் முத்தகாட்சிகளில் நடித்திருந்தார்.
இவரது இதுவே இவரது முதல் முத்த காட்சியாகும். இவர் 2006 ல் கேடி என்ற படத்தின் மூலமாக தமிழில் அறிமுகமாகி சிறுத்தை, படிக்காதவன், பையா, ஐயன், தர்மதுரை, கண்ணே கலைமானே, வீரம் போன்ற படங்களில் குடும்ப பாகான தோற்றங்களில் நடித்துள்ளார்.
சமீபகாலமாக சமூக வலைதளங்களில் இவர் தனது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டும் வருகிறார். அதனால் இவரது பாலோவர்ஸ் திடீரென உயர்ந்து உள்ளனர்.
இந்நிலையில், தென்னிந்திய சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளின் ஒருவராக தமன்னா இருந்து வருகிறார். சமீப காலமாக தமன்னா கிளாமர் லுக்கிலும், படுக்கையறை காட்சிகளிலும் நடித்து ரசிகர்களை வாய்ப்பிழக்க வைத்து வருகிறார்.
லவ் ஸ்டோரி 2 படத்தில் முக்கிய ரோலில் நடித்த தமன்னா சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். அதில் பாலிவுட் நடிகர் விஜய் வர்மாவுடன் ரகசிய காதலில் இருப்பதாக இருவரும் முத்தம் கொடுத்த புகைப்படங்கள் வைரலானது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
இந்நிலையில் தங்களுடைய காதல் லவ் ஸ்டோரி 2 படத்தின் போது துவங்கியதாகவும், சக நடிகர்கள் நிறைய பேர் தன்னுடன் நடித்த போதிலும், அவர்கள் மீது தனக்கு ஈர்ப்பு ஏற்படவில்லை என்றும், ஆனால் விஜய் வர்மாவுடன் அந்த ஈர்ப்பு இருந்ததாகவும், அது தனக்கு ஸ்பெஷல் என்றும், தான் எதிர்பார்த்த ஒருவர் இவர்தான் எனவும், யார் ஒருவரிடம் அவருக்காக எதையும் மாற்றிக்கொள்ள தயாராக இருக்கிறோமோ அவர்தான் நமக்கானவர் என்றும், விஜய் வர்மா தான் தன்னுடைய மகிழ்ச்சியின் இருப்பிடமே என்று தமன்னா காதலை வெளிப்படையாக உறுதிப்படுத்தி இருந்தார்.
இருவரும் தங்களது காதலை ஒப்புக்கொண்ட நிலையில் இருவரும் எப்போது திருமணம் செய்துகொள்ள போகிறீர்கள் என ரசிகர்கள் கேட்டு வந்தனர். ஆனால், இருவரும் அதற்கு செவி சாய்க்கவில்லை. ஆனால், தற்போது அந்த கேள்வியை தமன்னாவின் வருங்கால மாமியார் கேட்க துவங்கிவிட்டாராம். எப்போது இருவரும் திருமணம் செய்துகொள்ள போகிறீர்கள் என ஆசையுடன் கேட்டுள்ளாராம்.
இதனால் கண்டிப்பாக விரைவில் தமன்னா – விஜய் வர்மா தரப்பில் இருந்து நல்ல செய்தி வெளிவரும் என நெட்டிசன்கள் கூறி வருகிறார்கள்.