ஏய்….பல்லை உடைப்பேன்! தன் குடும்பத்தை கேவலப்படுத்தி பேசிய SPB’யை மிரட்டிய சிவாஜி!
Author: Shree21 July 2023, 6:14 pm
சிவாஜி கணேசன் புகழ் பெற்ற தமிழ் திரைப்பட நடிகர் ஆவார். இவரது இயற்பெயர் விழுப்புரம் சின்னையா மன்ராயா் கணேசமூர்த்தி ஆகும். ஆரம்பத்தில் மேடை நாடகங்களில் நடித்துக் கொண்டிருந்த சிவாஜி கணேசன், 1952 இல் பி. ஏ. பெருமாள் முதலியார் என்பவர் தயாரித்த பராசக்தி என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் அறிமுகமானார்.
வித விதமான கதாபாத்திரங்களை தேர்வு செய்து அதில் திறம்பட நடிப்பது இவரின் தனி திறனாகும். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி மொழிகளில் 288 படங்களில் நடித்துள்ளார். தமிழ் திரைப்படத்துறையில் 250 படங்களுக்கு மேல் கதாநாயகனாக நடித்த ஒரே நடிகர் சிவாஜி கணேசன்.
நல்ல குரல்வளம், தெளிவான, உணர்ச்சி பூர்வமான தமிழ் உச்சரிப்பு, சிறந்த நடிப்புத் திறன் ஆகியவை இவரின் சிறப்புகளாகும். நடிகர் திலகம், நடிப்புச் சக்கரவர்த்தி, சிம்மக்குரலோன் என்று பெரும்பாலான மக்களால் அழைக்கப்படுகின்றார். நீண்ட வசனங்களை எளிதில் உள்வாங்கிக் கொண்டு அதை உணர்ச்சிபூர்வமாக திரையில் பிரதிபலிக்கும் ஆற்றல் இவருக்கு இயல்பாகவே இருந்தது.
சர்வதேச அளவில் சிறந்த நடிகர் விருதை வென்ற முதல் இந்திய நடிகர் சிவாஜி கணேசன். 1960 இல் எகிப்தின் கெய்ரோவில் நடைபெற்ற ஆப்பிரிக்க -ஆசிய திரைப்பட விழாவில் அந்த விருது வழங்கப்பட்டது. இந்திய அரசாங்கத்தின் பத்ம ஸ்ரீ, பத்ம பூசன் மற்றும் திரைப்பட துறையின் உயரிய விருதான தாதாசாஹெப் பால்கே விருது போன்ற விருதுகளை வென்றுள்ளார். மேலும் இவர் பிரான்ஸ் நாட்டின் உயரிய விருதான செவாலியர் விருது பெற்ற முதல் இந்திய நடிகரும் ஆவார்.
ஒருமுறை நடிகர் திலகம் சிவாஜி கணேசன் பிரபல பாடகர் எஸ்பியை பார்த்து “என்னடா உடம்பு இது…. பார்க்க தார் டப்பா மாதிரி இருக்குற” என்று என்னை கிண்டல் அடித்தார். அதற்கு நான், உங்க வீட்ல நீங்க மட்டும் ஒல்லியாக இருக்கீங்க… பிரபு மற்றும் ராம்குமார் எல்லாம் ரொம்ப ஒல்லியா இருக்காங்க? என்று பதிலுக்கு நக்கல் அடித்தேன். அதற்கு உடனே சிவாஜி ஏய்… பல்லை உடைப்பேன் என மிரட்டினார். அதை பார்த்த அங்கிருந்தவர்களுக்கு நாங்கள் சண்டை போடுவது போல் தெரிந்தது. ஆனால் உண்மையில் நாங்கள் விளையாட்டாக தான் பேசிக்கொண்டிருந்தோம் என அவர் கூறினார்.