அடுத்த ஜூலி இந்தம்மா தான்…. பிக்பாஸ் 7 போட்டியாளர்கள் லிஸ்ட் இதோ- யார் யாருன்னு பாருங்க!

Author: Shree
22 July 2023, 10:14 am

இந்திய தொலைக்காட்சிகளில் பல மொழிகளில் பரவலாக ஒளிபரப்பப்படும் நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக்பாஸ் ரியாலிட்டி ஷோ தமிழில் இதுவரை 6 சீசன்கள் முடிந்துள்ளது கமல் ஹாசன் தொகுத்து வழங்கி வரும் இந்நிகழ்ச்சிக்கு பெருவாரியான ரசிகர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது அடுத்த சீசனாக பிக்பாஸ் 7 நிகழ்ச்சி துவங்க உள்ளனர். அதற்கான வேளைகளில் பிக்பாஸ் குழு மும்முரமாக இறங்கியுள்ளது. இந்த முறை யார் யாரெல்லாம் பங்கேற்க உள்ளார்கள் என்பதை கொஞ்சம் பொறுத்திருந்து பார்க்கலாம். கடைசியாக முகமது அசீம் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார். ஆனால் அதை மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் அடுத்த சீசனுக்கான வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்த சீசனும் மற்ற சீசன்களை போலவே சர்ச்சை ஏற்படுத்தும் வகையில் இருக்கவேண்டும் என்பதற்காக பார்த்து பார்த்து போட்டியாளர்கள் தேர்வு செய்யப்பட்டு வருகிறார்களாம். அதன் படி இந்த சீசனில் கலந்துக்கொள்ளப்போகும் போட்டியாளர்கள் குறித்த விவரங்கள் வெளியாகியுள்ளது.

அதில் விஜய் டிவி விஜே ஜாக்குலின், நடிகர் பப்லு பிருத்திவிராஜ் , நடிகை ரேகா நாயர் , சீரியல் நடிகை ரக்ஷிதா மகாலக்ஷ்மியின் கணவர் தினேஷ் , கோயம்புத்தூர் பெண் பஸ் ஓட்டுநராக ஷர்மிளா, நடன இயக்குனர் ஸ்ரீதர் உள்ளிட்டோர் தேர்வாகியிருப்பதாக நம்ப தகுந்த வட்டாரத்தில் இருந்து தகவல்கள் வெளியாகியுள்ளது. இதில் சினிமா சம்மந்தப்பட்ட பேக்ரவுண்டு எதுவுமே இல்லாமல் ஜூலி போன்றே மக்கள் மத்தியில் அதிகம் பேசப்பட்ட நபர் ஷர்மிளா இந்த சீசனில் ஜூலி போன்று இருப்பார் என நெட்டிசன்ஸ் கூறி வருகிறார்கள்.

  • Tamannaah Bhatia and Vijay Varma part ways after years of dating காதலரை பிரிந்தார் நடிகை தமன்னா.. இதுக்கும் அவருதான் காரணமா? இன்ஸ்டா பதிவால் பரபர!
  • Close menu