இத விட நல்ல வாய்ப்பு கிடைக்காது… சரியா பயன்படுத்துங்க : தமிழக அரசுக்கு அண்ணாமலை அறிவுறுத்தல்!

Author: Udayachandran RadhaKrishnan
22 July 2023, 12:53 pm

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில்,
நமது மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்களின் தொலைநோக்குப் பார்வையில் வகுக்கப்பட்ட தேசியக் கல்விக் கொள்கை 2020, குழந்தைகள் அவர்களின் தாய்மொழியில் கல்வி கற்பதையும் பள்ளிகளில் மாநில மொழிகளை மேம்படுத்துவதையும் வலியுறுத்துகிறது.

CBSE யின் சமீபத்திய சுற்றறிக்கை, நாடு முழுவதும் உள்ள CBSE பள்ளிகள், உயர்நிலை வரை இந்திய மாநில மொழிகளைப் பயிற்று மொழியாகப் பயன்படுத்துவதைக் கருத்தில் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டுள்ளது.

வெளிநாட்டு மொழிகளுக்குப் பதிலாக நமது தாய்மொழிக் கல்வியை ஊக்குவித்து, குழந்தைகளுக்கான கல்வியை முழுமையாக்கியதற்காக, மத்திய கல்வி அமைச்சகம் மற்றும் மாண்புமிகு மத்திய கல்வி அமைச்சர் திரு தர்மேந்திர பிரதான் அவர்கள் எடுத்துள்ள நடவடிக்கைகளுக்கு, தமிழக பாஜக சார்பாக பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

தாய்மொழிக் கல்வி, உண்மையான படைப்பாற்றலை உருவாக்கும் என்பதை நாங்கள் உறுதியாக நம்புகிறோம். இதேபோன்ற உத்தரவை, தமிழகப் பள்ளிகளுக்கும் வழங்குமாறு இந்த வாய்ப்பினைப் பயன்படுத்தி தமிழக அரசை வலியுறுத்திக் கொள்கிறோம் என குறிப்பிட்டுள்ளார்.

  • Ajith exits Neeruku Ner விஜய் படத்திற்கு NO சொன்ன அஜித்..அடுத்தடுத்து விலகிய பிரபலங்கள்..!
  • Views: - 340

    0

    0