முதியோர் உதவித்தொகை உயர்த்தி தமிழக அரசு உத்தரவு.. எந்த மாதத்தில் இருந்து தெரியுமா?
Author: Udayachandran RadhaKrishnan22 July 2023, 2:31 pm
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்திற்கு பின்னர் அமைச்சர் தங்கம் தென்னரசு செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் கூறியதாவது, முதியோர், ஆதரவற்றோர் மாத உதவித்தொகை ரூ.1,200ஆக உயர்த்தப்பட்டுள்ளது. கைம்பெண்களுக்கான உதவித்தொகையும் ரூ. 1000-லிருந்து ரூ. 1,200 ஆக உயர்த்தப்பட உள்ளது.
மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை ரூ. 1,500 ஆக உயர்த்தப்பட உள்ளது. உயர்த்தப்பட்ட உதவித்தொகைகள் ஆகஸ்ட் மாதம் முதல் வழங்கப்படும். ஓய்வூதியம் மூலம் 30 லட்சம் பயனாளிகள் பயன் பெறுவர்.
கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம் தொடர்பான முகாம்கள் 3 கட்டமாக நடத்தப்பட உள்ளன. மணிப்பூர் கலவரத்திற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏற்கனவே கண்டனம் தெரிவித்துள்ளார். மணிப்பூர் சம்பவம் குறித்து அதிமுக இதுவரை வாய் திறக்காதது ஏன்? என கேள்வி எழுப்பி உள்ளார்.