ஆலியா பட் உடன் வாழ பிடிக்கவில்லை… விவாகரத்து கேட்கும் ரன்பீர் கபூர்? பகீர் கிளப்பிய பிரபல நடிகை!

Author: Shree
22 July 2023, 2:24 pm

பாலிவுட்டின் நட்சத்திரங்களான ரன்பீர் கபூர் மற்றும் ஆலியா பட் பிரம்மாஸ்திரா படத்தில் முதன்முதலில் ஒன்றாக நடித்தனர். அந்த படத்திற்கு பிறகு காதலிக்கத் தொடங்கிய இந்த ஜோடி கடந்த 2019-ம் ஆண்டே திருமணம் செய்து கொள்ள இருந்தனர். ஆனால் ரன்பீர் கபூரின் தந்தை ரிஷி கபூர் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார்.

அதன்பிறகு இந்த ஜோடியின் திருமணம் ஒத்தி வைக்கப்பட்டது. கொரோனா காலத்தில் திருமணம் செய்து கொள்ளும் எண்ணம் இல்லை என்று இருவரும் கூறி வந்தனர். அதன் பிறகு கடந்த ஆண்டு மும்பையில் உள்ள ரன்பீர் கபூரின் வாஸ்து இல்லத்தில் ரன்பீர் கபூர் – ஆலியா பட் திருமணம் நடைபெற்றது.

இத்திருமணத்தில் பல்வேறு நட்சத்திர பிரபலங்கள் கலந்துக்கொண்டு வாழ்த்தினர். திருமணத்திற்கு முன்பே ஆலியா பட் கர்ப்பமாக இருந்ததாகவும் அதனால் அவசர அவசராக திருமணம் நடைபெற்றது. பின்னர் இவர்களுக்கு அழகான பெண் குழந்தை பிறந்தார்.

இப்படி ஒரு நேரத்தில் இந்த ஜோடி பிரிந்து வாழ்ந்து வருவதாக பிரபல நடிகை கங்கனா ரனாவத் கூறி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். ஆம், இது குறித்து பேசியுள்ள அவர், ரன்பீர் கபூர் சமீபத்தில் அவர் குடும்ப உறுப்பினர்களோடு லண்டன் சென்றார்.

ஆனால் மனைவி ஆலியா,மகளை அழைத்து செல்லவில்லை. காரணம் இருவரும் இப்போது பிரிந்து தான் வாழ்ந்து வருகிறார்கள். பணத்திற்காக திருமணம் செய்து கொண்டால் இப்படி தான் நடக்கும். ரன்பீர் கபூர் உண்மையிலே ஆலியாவை காதலித்து திருமணம் செய்யவில்லை.

அவர் மாஃபியா நெருக்கடியால் தான் திருமணம் செய்து கொண்டார். இந்த போலியான திருமணத்தை முடித்துக்கொள்ள முயற்சி நடந்து வருகிறது. ஆனால், விவாகரத்து செய்ய மாஃபியா கும்பல் விடமாட்டார்கள் என கூறி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

  • Bala and Kanja Karuppu relationship OFFICE BOY-யா வேல செஞ்ச பிரபல காமெடி நடிகர்…வாழ்க்கை கொடுத்த இயக்குனர் பாலா..!
  • Views: - 789

    0

    1