உயிருடன் இருக்கும் பெண்ணுக்கு இறப்பு சான்றிதழ்… இடத்தை அபகரிக்க கூட்டுச்சதி ; விசாரணை வளையத்தில் பத்திரப்பதிவு அலுவலகம்..!!

Author: Babu Lakshmanan
22 July 2023, 7:30 pm

ஆம்பூரை சேர்ந்த பெண் உயிருடன் இருக்கும் போதே இறந்து விட்டதாகக் கூறி போலி ஆவணங்கள் தயார் செய்து பத்திரப்பதிவு செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வேலூர் மாவட்டம் ஆம்பூரைச் சேர்ந்த காஞ்சனா – ரவிவர்மா தம்பதியினருக்கு சொந்தமான நிலம் ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் குப்பம் சார் பதிவாளர் அலுவலகத்திற்கு உட்பட்ட பகுதியில் இரண்டு வீட்டு மனைகள் உள்ளன. ஆனால், காஞ்சனா கணவர் இறந்து விட்ட நிலையில், தனது பிள்ளைகளுடன் கஞ்சனா ஆம்பூரில் வசித்து வருகிறார்.

இந்நிலையில் காஞ்சனா இறந்து விட்டதாக ஆம்பூரில் போலி ஆவணங்கள் தயாரித்து ரவி பெருமாள் என ஒருவரை கஞ்சனாவின் கணவர் என குடும்ப உறுப்பினர் சான்றிதழ் வைத்து சிலர் கூட்டாக இணைந்து பத்திரப்பதிவு செய்துள்ளனர்.

குடுபள்ளி மண்டலம் நலகம்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த காஞ்சனா இறந்துவிட்டதாகவும், மற்றொரு நபரை அவரது கணவர் என்றும், குடும்ப உறுப்பினர் சான்றிதழ் மற்றும் இறப்புச் சான்றிதழை கவுஸ் பாஷா பெற்றுள்ளார்.

பின்னர் குப்பம் சப்-ரிஜிஸ்ட்ர் அலுவலக ஊழியர்களை ஏமாற்றி, காஞ்சனா இறந்துவிட்டார் எனக்கூறி ரவி பெருமாள் என்ற பெயரில் ஒருவரை காஞ்சனா கணவராக காண்பித்து, கவுஸ் பாஷா காஞ்சானாவிற்கு சொந்தமான குடுபள்ளி மண்டலம் நல்லகம்பள்ளியில், 100 கெஜம், 218 கெஜம் இரண்டு வீட்டு மனைகளை தன் பெயரில் பதிவு செய்து பெற்றார். கடந்த ஆண்டு அக்டோபர் 21-ம் தேதி பத்திர பதிவு செய்யப்பட்டது. இதற்கு குப்பம் சார் பதிவாளர் அலுவலகத்தில் சில அரசியல் தலைவர்கள் மற்றும் அதிகாரிகள் ஒத்துழைப்புடன் பத்திரபதிவு நடந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், தனது பெயரில் இருந்த இடங்கள் குறித்து விசாரிக்க சென்ற காஞ்சனாவுக்கு உண்மை நிலை தெரிந்து அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து சப் ரிஜிஸ்ட்ரார் அலுவலகத்துக்கு நேரடியாக வந்து புகார் அளித்தார். காஞ்சனா, தான் உயிருடன் இருப்பதாகவும், தன் மதிப்புள்ள சொத்தை போலி இறப்புச் சான்றிதழ் மூலம் பதிவு செய்ததாகவும், துணைப் பதிவாளர் வெங்கடசுப்பையாவிடம் தெரிவித்தார்.

இந்த மோசடி குறித்து விசாரித்ததில் காஞ்சனா உயிருடன் இருக்கும்போதே, அவருக்கு சொந்தமான இரண்டு மதிப்புமிக்க சொத்துக்களை முறைகேடாக பதிவு செய்த கவுஸ் பாஷாவுடன் இணைந்து பதிவுக்கு உதவிய முத்திரை எழுத்தாளர்கள், சாட்சிகள் மற்றும் ஊழியர்கள் மீது சப்-ரிஜிஸ்டிரார் வெங்கட சுப்பையா குப்பம் போலீசில் புகார் அளித்தார். பதிவேடுகளை ஆய்வு செய்த போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரனை நடத்தி வருகின்றனர்.

  • Samantha About Naga Chaitanya வீணாப் போன வேலையை செஞ்சிட்டேன் : நாக சைதன்யா பற்றி சமந்தா பதில்!
  • Views: - 371

    0

    0