உடம்பில் கோடு போட்டால் புலியா? I.N.D.I.A கூட்டணி குறித்து அண்ணாமலை விமர்சனம்!!

Author: Udayachandran RadhaKrishnan
23 July 2023, 6:51 pm

நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு பாஜகவை வீழ்த்தும் மாபெரும் கூட்டணியாக எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து, கூட்டணிக்கு I.N.D.I.A எனவும் பெயர் வைத்துள்ளனர். இது குறித்து இன்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையிடம் கேட்டபோது, இந்தியா என்ற உணர்வு மக்களின் மனதில் இருக்கவேண்டும்.

திமுக அரசுக்கு எதிராக பாஜக சார்பில் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் அண்ணாமலை, செய்தியாளர்களை சந்தித்து பேசினார். தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என திமுக அரசுக்கு எதிராக தமிழக பாஜக சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பிளவுபடுத்துவதில் முதன்மையாக இருக்கும் திமுக இந்த இந்தியா என்று கூறிவருவது தான் ஆச்சர்யமாக இருக்கிறது. காங்கிரஸ் தலைவர்கள் தான் தேசத்துக்கு எதிராக கருத்துகளை கூறிவந்தனர், தற்போது இந்தியா என்று கூறுவது மக்களுக்கு தெரியும் யார் உண்மையான இந்தியன் என்று, அவர்கள் இந்தியாவை தம் நெஞ்சத்தில் வைத்துள்ளனர்.

மேலும் எதிர்க்கட்சிகளின் இந்த கூட்டணியின் பெயர் குறித்து ஒரு குட்டிக்கதையும் அண்ணாமலை கூறினார், உண்மையான புலிக்கும் உடம்பில் கோடு போட்டுக்கொண்ட நாய்க்கும் வித்தியாசம் உள்ளது, புலியாக வேண்டும் என நாய் ஒன்று தன் உடலில் கோடுகளை வரைந்து விட்டு தானும் புலி என்று கூறிக்கொள்வதைப்போல் இருக்கிறது என்று அண்ணாமலை கூறினார்.

  • what is the problem on sikandar salman khan asks people படத்துல என்ன பிரச்சனை, உங்க கருத்தை சொல்லுங்க- பப்ளிக்கை நேரடியாக சந்தித்த சல்மான் கான்!