இரவோடு இரவாக பாஜக பிரமுகர் கைது… திமுக கொடுத்த புகார் : போலீசார் நடவடிக்கை!!

Author: Udayachandran RadhaKrishnan
24 July 2023, 8:27 am

இரவோடு இரவாக பாஜக பிரமுகர் கைது… திமுக கொடுத்த புகார் : போலீசார் நடவடிக்கை!!

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில், நேற்று விலைவாசியை கட்டுப்படுத்தக்கோரி நடந்த பாஜக ஆர்ப்பாட்டத்தில், பேசிய தெற்கு மாவட்ட பாஜக தலைவரும் முன்னாள் எம்எல்ஏ மான வி.ஏ.டி கலிவரதன், மறைந்த திமுக தலைவர் கலைஞர் குறித்தும் திமுக மாநில மகளிர் அணி செயலாளர் எம் பி யுமான கனிமொழி குறித்தும் தகாத வார்த்தைகளில் வாய் கூசூம் அளவிற்கு பேசியிருந்தார்.

இது தொடர்பாக திமுகவினர் கொடுத்த புகாரின் பேரில் விக்கிரவாண்டி போலீசார் வழக்கு பதிவு செய்து வி.ஏ.டி கலியவரதனை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்

  • Anitha Vijayakumar Viral Video நடிகர் விஜயகுமாரின் மகள் அனிதாவின் உருக்கமான பகிர்வு…வைரலாகும் வீடியோ!