பாஜக கூட்டணி கட்சிகளின் கூட்டத்திற்கு அழைப்பில்லாதது ஏன்..? கூட்டணி குறித்து வெளிப்படையாக சொன்ன பிரேமலதா விஜயகாந்த்..!!

Author: Babu Lakshmanan
24 July 2023, 1:50 pm

நாடாளுமன்ற தேர்தலில் தேமுதிக யாருடன் கூட்டணி அமைத்துள்ளது என்பதை அக்கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது :- தே.மு.தி.க. தற்போது எந்த கூட்டணியிலும் இல்லை. எதிர்காலத்தில் யாருடன் கூட்டணி என்பதை விரைவில் அறிவிப்போம். யாருடனும் கூட்டணியில் இல்லாத நிலையில் பாஜக கூட்டணி கட்சிகள் கூட்டத்திற்கு எப்படி அழைப்பு வரும்.

தேர்தலில் யாருடன் கூட்டணி என்பதை விஜயகாந்த் அறிவிப்பார். கூட்டணியில் பெயர் மட்டுமே மாறியுள்ளது, மக்களின் நிலை மாறவில்லை. ‘இந்தியா’ கூட்டணியில் இருக்கும் தலைவர்களுக்குள் பல்வேறு முரண்பாடுகள் உள்ளன. திமுகவுடன் மறைமுகமாக பேச வேண்டிய அவசியம் தேமுதிகவுக்கு இல்லை. திமுக தேர்தலுக்கு முன் சொன்ன வாக்குறுதி வேறு. நிறைவேற்றும் வாக்குறுதிகள் வேறுபாடாக உள்ளது, எனக் கூறினார்.

  • Bala and Kanja Karuppu relationship OFFICE BOY-யா வேல செஞ்ச பிரபல காமெடி நடிகர்…வாழ்க்கை கொடுத்த இயக்குனர் பாலா..!
  • Views: - 384

    0

    0