MY உயிர்ஸ்… மகனுடன் கொஞ்சி விளையாடும் நயன்தாரா… குடும்ப பாசத்தால் உருகிய விக்னேஷ் சிவன்!

Author: Shree
24 July 2023, 3:26 pm

தமிழ் சினிமாவின் டாப் நடிகையான நயன்தாரா மலையாள குடும்பத்தில் பிறந்து வளர்ந்து அங்குள்ள லோக்கல் சேனல் ஒன்றில் ஆங்கராக பணிபுரிந்து அதன் பின்னர் கிடைத்த படவாய்ப்புகளை மிஸ் பண்ணாமல் நடித்து மிகப்பெரிய மார்க்கெட் பிடித்து இன்று டாப் நடிகை என்ற அந்தஸ்தில் இருக்கிறார்.

முதன் முதலில் 2003 ஆம் ஆண்டு மனசினகாரே என்ற மலையாள மொழித் திரைப்படம் மூலம் திரைப்படத்துறைக்கு அறிமுகமான நயன்தாரா, 2005 ஆம் ஆண்டு ஐயா திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரைப்படத்துறைக்கு அறிமுகம் ஆனார். தமிழில் அறிமுகமான முதல் படத்திலே பரவலான ரசிகர்கள் வட்டாரத்தை அதிகரித்துக்கொண்டார்.

தொடர்ந்து தமிழில் நடித்து சிறந்த கதைகளை தேர்வு செய்து ஹீரோயினுக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதைகளில் நடித்து முன்னணி நடிகையாக மார்க்கெட் பிடித்தார். இதனிடையே விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். அவர்களுக்கு இரட்டை ஆண் குழந்தைகள் உள்ளனர். நயன்தாராவுக்கு திருமணத்திற்கு பின்னர் தொழில் சார்ந்து பல சறுக்கல்களை சந்தித்து வருகிறார்.

அதன் பின்னர் தான் தற்போது ஜவான் படத்தில் கமிட்டாகி நடித்து வருகிறார். இந்த படம் மூலம் நயன்தாரா பாலிவுட்டில் அறிமுகமாகவிருக்கிறார். இதன் மூலம் அவருக்கு பாலிவுட்டில் ஒரு நல்ல ஸ்கோப் கிடைக்கும் எதிர்பார்க்கலாம். இந்நிலையில் நயன்தாரா நேற்று தன் மகன்களுடன் கொஞ்சி விளையாடி நேரத்தை செலவிட்ட போட்டோக்கள் சமூகவலைத்தளங்களில் விக்னேஷ் சிவன் வெளியிட்டுள்ளார். அந்த பதில் ” என்னுடைய உயிர்கள் நிறைய அன்புடன் எளிமையான தருணங்கள் நிறைந்த ஞாயிறு” என கூறி பதிவிட்டு அனைவரது கவனத்தையும் ஈர்த்துவிட்டார்.

  • no individual is bigger than the sport tweet by vishnu vishal கிரிக்கெட்டை விட தனிநபர் பெரியவர் அல்ல- CSK அணியை விளாசிய விஷ்ணு விஷால்