என்ன இப்படியாகிடுச்சே.. அனிகாவை ஓரம் கட்டி ஹீரோயினாக என்ட்ரி கொடுக்கும் பேபி சாரா..!
Author: Vignesh24 July 2023, 5:45 pm
சாரா அர்ஜுன் இவர் திரைப்படங்கள் மற்றும் விளம்பரங்களில் நடித்துள்ள ஒரு இந்திய குழந்தை நட்சத்திரம் ஆவார்.
சாராவின் தந்தை ராஜ் அர்ஜுன் இவர் ஒரு இந்தி நடிகர் ஆவார். காலு, சப்ரி மற்றும் இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலி அவர்களின் ரவுடி ரத்தோர் உள்ளிட்ட பல இந்தி மொழி திரைப்படங்களில் நடித்து உள்ளார்.
மேலும் இவர் இயக்குநர் ஏ. எல். விஜய் அவர்களின் தெய்வத்திருமகள் திரைப்படத்தில் ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவரது தாயார் சான்யா ஒரு நடன ஆசிரியர் ஆவார். மற்றும் அவளுடைய பெற்றோர்கள் முதலில் போபால் வசித்து வந்தனர், பின்னர் இவரது பெற்றோர் 2000 ஆம் ஆண்டு முதல் மும்பையில் குடிப்பெயர்ந்தனர்.
‘தெய்வத்திருமகள்’, ‘சைவம்’ ஆகிய படங்கள் மூலம் பிரபலமான சாரா சமீபத்தில் ஹலிதா ஷமீம் இயக்கத்தில் ‘சில்லுக் கருப்பட்டி’ திரைப்படத்தில் ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
பொன்னியின் செல்வன் படத்தில் நடிகை ஐஸ்வர்யா ராய் நடித்துள்ள நந்தினி கதாபாத்திரத்தின் சிறு வயது கதாபாத்திரத்தில் நடிகை சாரா அர்ஜூன் நடித்துள்ளார்.
இதனிடையே, சினிமாவில் அறிமுகமாகி குழந்தை கதாபாத்திரங்களில் நடித்து வந்தார். இப்போ குழந்தை சாராவா என வாயை பிளக்கும் அளவுக்கு தற்போது தன்னுடைய புகைப்படங்களை இணையாளத்தில் பதிவிட்டுள்ளார்.
கடந்த ஆண்டு வெளிவந்து மாபெரும் வெற்றியடைந்த பொன்னியின் செல்வன் முதல் பாகத்தில், சிறு வயது நந்தினி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
இந்நிலையில், ரசிகர்கள் அனைவருக்கும் ஷாக் கொடுக்கும் விதமாக பேபி சாரா நடித்துள்ள காட்சியின் புகைப்படம் வெளிவந்துள்ளது.
மேலும், கொட்டேஷன் கேங் எனும் திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ள பேபி சாரா புகைப்பிடிக்கும் காட்சியில் நடித்து அதிர்ச்சியடைய வைத்தார்.
இந்நிலையில், அடுத்ததாக தமிழில் கதாநாயகியாக நடிகை சாரா என்ட்ரி கொடுக்கப் போகிறாராம். இவரை குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் செய்த இயக்குனர் விஜய் இவரை கதாநாயகியாக அறிமுகம் செய்ய உள்ளாராம்.
இது குறித்து இயக்குனர் விஜய் பேசுகையில், பொன்னின் செல்வன் 2 படத்தில் மணிரத்தினம் சார் தெய்வீக அழகுடன் சித்தரித்துக் காட்டிவிட்டார். இனி சாரா தைரியமாக ஹீரோயினாக நடிக்கலாம் எனவும், அவரை தான் 2025 ஆம் ஆண்டு தமிழில் கதாநாயகியாக அறிமுகப்படுத்த இருக்கிறேன் என வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.