அதிக கடன் வாங்கிய மாநிலங்களின் பட்டியல் வெளியீடு… தமிழகத்திற்கு எத்தனையாவது இடம் தெரியுமா..?

Author: Babu Lakshmanan
24 July 2023, 8:01 pm

இந்திய அளவில் அதிக கடன் வாங்கிய மாநிலங்களின் பட்டியலில் தமிழகம் முதலிடம் பிடித்துள்ளது.

நாடாளுமன்றத்தின் மக்களவையில் அதிக கடன் வாங்கிய மாநிலங்கள் குறித்து தெலுங்கானா எம்.பி. ஒருவர் கேள்வி எழுப்பினார். இந்தக் கேள்விக்கு பதிலளித்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பதிலளித்தார்.

அப்போது அவர் பேசியதாவது :- கடந்த மார்ச் மாதம் வரை தமிழகத்தின் கடன் தொகை ரூ.7,53,860 கோடியாக உள்ளது. அதிக கடன் வாங்கியது தமிழ்நாடு தான். இந்திய அளவில் அதிக கடன் வாங்கிய மாநிலங்களில் உத்தர பிரதேசம் இரண்டாவது இடத்திலும், மகாராஷ்டிரா மூன்றாவது இடத்திலும் உள்ளது, என தெரிவித்துள்ளார்.

  • Rajkumar Periyasamy Pan-India Film ஒரே படம் ஓஹோ-னு வாழ்க்கை…பாலிவுட்டில் களம் இறங்கிய அமரன் பட இயக்குனர்..!
  • Views: - 364

    0

    0