தீயில் பொசுங்கிய சொகுசு கார்.. நடுரோட்டில் திடீரென தீப்பிடித்த BMW கார் : வாகன ஓட்டிகளே உஷார்!!

Author: Udayachandran RadhaKrishnan
25 July 2023, 2:28 pm

தீயில் பொசுங்கிய சொகுசு கார்.. நடுரோட்டில் திடீரென தீப்பிடித்த BMW கார் !!

சென்னை குரோம்பேட்டை ஜி.எஸ்.டி.சாலை பேருந்து நிலையத்தில் சிக்னல் அருகே சென்று கொண்டிருந்த பி.எம்.டபுள்யூ சொகுசு காரின் முன் பக்கத்திலிருந்து திடீரென புகை வரத் தொடங்கியது.

புகை வருவதை அறிந்த கார் ஓட்டுநர் காரை சாலையின் நடுவே நிறுத்திவிட்டு இறங்கி தப்பித்தார். உடனடியாக தாம்பரம் தீயணைப்பு துறை மற்றும் குரோம்பேட்டை காவல்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். அரை மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இருந்தபோதும், கார் முற்றிலும் எரிந்து சேதமானது.

காரில் இருந்து வெளியேறிய புகை மண்டலம் அப்பகுதி முழுவதும் பரவியது.
விசாரணையில் குன்றத்தூரைச் சேர்ந்த பார்த்தசாரதி (22) காரை ஓட்டி வந்ததும், காரின் உரிமையாளர் அருண் பாலாஜி என்பதும் தெரியவந்தது.
மேலும், திருவல்லிகேணியில் இருந்து திண்டிவனம் நோக்கி செல்லும் போது குரோம்பேட்டையில் கார் தீவிபத்தில் சிக்கியது விசாரணையில் தெரியவந்தது.

கார் தீ விபத்தால் ஜி.எஸ்.டி. சாலையில் கடுமையான போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். போக்குவரத்து காவல்துறையினர் போக்குவரத்தை உடனடியாக சரி செய்தனர்.

  • actress anagha ravi joined suriya 45 movie சூர்யா படத்தில் திடீரென இணைந்த டிரெண்டிங் நடிகை… அதுக்குள்ளவா?