என்எல்சி-க்காக வயல்களில் இறங்கி பயிர்கள் அழிப்பு… விவசாயிகள் வேதனை… உடனே போன் போட்ட அண்ணாமலை..!!!

Author: Babu Lakshmanan
26 July 2023, 4:10 pm

நெய்வேலியில் பயிர்களை அழித்து விவசாய நிலங்களை ஆக்கிரமிக்கும் தமிழக அரசின் செயலுக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

கடலூர் மாவட்டம் நெய்வேலியில் என்.எல்.சி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இங்கு நிலக்கரி சுரங்கப் பணிகளுக்காக புதிதாக 25,000 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட உள்ளதாக தகவல் வெளியானது. இதைத்தொடர்ந்து, இதற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகளும், பல்வேறு அரசியல் கட்சிகளும் போராட்டங்களில் இறங்கினர்.

என்.எல்.சி விரிவாக்கத்துக்குக் கையகப்படுத்திய நிலங்களுக்கு உரிய இழப்பீடு தர வேண்டும் என்றும், குடும்பத்தில் ஒருவருக்கு நிரந்தரப் பணி வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Cuddaloire - Updatenews360

இந்நிலையில், கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே வளையமாதேவி சுற்று வட்டார பகுதியில், சுரங்க விரிவாக்கத்திற்காக நிலங்களை சமன்படுத்தும் பணியில் என்.எல்.சி. நிர்வாகம் இறங்கியுள்ளது.

சுமார் 35 ஜே.சி.பி மற்றும் பொக்லைன் இயந்திரங்கள் மூலம் நிலங்கள் சமன்படுத்தும் பணி இன்று தொடங்கியுள்ளது. வளையமாதேவி சுற்றுவட்டாரப் பகுதியில் பயிர் பிடிக்கக் காத்திருக்கும் நெற்பயிர்கள் உள்ள விளை நிலங்களில் ஜே.சி.பி இயந்திரங்கள் இறங்கியுள்ளது விவசாயிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

என்எல்சி நிர்வாகத்திற்காக பயிர்களை அழிக்கும் தமிழக அரசின் செயலுக்கு தமிழக அரசியல் கட்சிகளின் தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.இது தொடர்பாக அவர் விடுத்தள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:- “நெய்வேலியில், தமிழக அரசு, ஜேசிபி இயந்திரங்கள் மூலம் அத்துமீறி, பயிரிடப்பட்டுள்ள நிலங்களை பாழ்படுத்தி வருவதாக, விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். தமிழக அரசின் இந்தப் போக்கு, வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.

இது குறித்து, நெய்வேலி என்எல்சி நிறுவனத் தலைவர் திரு. பிரசன்னகுமார் அவர்களிடம் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு, இந்தப் பிரச்சினையில் விவசாயிகள் பாதிக்கப்படாதவாறு, சுமூகமான தீர்வு எட்டுமாறு தமிழக பாஜக
சார்பாகக் கேட்டுக் கொண்டேன்,” எனக் குறிப்பிட்டுள்ளார்.

  • Annamalai vs Cool Suresh Whip Trendஅண்ணாமலையை தொடர்ந்து கூல் சுரேஷ் சாட்டையடி… வைரலாகும் வீடியோ..!
  • Views: - 418

    0

    0