கோடான கோடி… இளசுகளை கிறங்கடித்த நிகிதாவா இது.? புள்ள குட்டியோட இப்போ எப்படி மாறிட்டாங்க பாருங்க..!
Author: Vignesh26 July 2023, 6:30 pm
கடந்த 2008 ஆம் ஆண்டு வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் சரோஜா. இப்படத்தில் மெர்சி சிவா, காஜல் அகர்வால், பிரேம்ஜி, வைபவ், எஸ்பி சரண் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்திருந்தனர்.
இசையில், உருவான இந்த படத்தில் இடம்பெற்ற அனைத்து பாடல்களுமே சூப்பர் ஹிட் ஆனது குறிப்பிடத்தக்கது. அதில், ஒன்றுதான் கோடான கோடி இந்த பாடலுக்கு பிரபல நடிகை நிகிதா ஆட்டம் போட்டிருந்தார். இவர் தமிழில் ஒரு சில திரைப்படங்களில் நடித்திருந்தார்.
கோடான கோடி பாடல் மூலம் தமிழில் பிரபலமான நடிகை நிகிதாவின் சமீபத்திய புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் நடிகை நிகிதாவா இது என கேட்டு வருகிறார்கள்.
Good morning. 💛 pic.twitter.com/6G6Mh9suOS
— Nikita thukral (@thukralnikita) July 25, 2023
இந்த வீடியோவை பார்த்ததும் சிலர், நிகிதாவிற்கு இவ்வளவு பெரிய மகள் இருக்கிறாரா? என்றும் வியப்பில் ஆழ்ந்தனர். செம க்யூட்டாக இருக்கும் இந்த வீடியோவிற்கு எக்கச்சக்கமான லைக்குகள் குவிகிறது.