சினிமாவுல அஜித், விஜய் தான் பட்டா வாங்கியிருக்காங்களா? SK’வுக்கு சவுக்கு சங்கர் ஆதரவு!

Author: Shree
27 July 2023, 6:36 am

தமிழ் சினிமாவில் காலம் காலமாக இரண்டு பெரிய நடிகர்களுக்கு இடையில் பெரிய போர் நடந்து வருகிறது. சிவாஜி – எம்.ஜி.ஆர் காலத்தில் துவங்கி ரஜினி – கமல் , விஜய் – அஜித் என கோடி கணக்கான ரசிகர்கள் இரண்டு பிளவாக பிரிந்து ஒருத்தரை ஒருத்தர் தாழ்த்தியும் புகழ்ந்தும் பேசி வருவது தான் இந்த போட்டிக்கு காரணம்.

ஆனால், இந்த இருவரை தாண்டி மூன்றாவது நடிகர் யாரும் உச்சத்தை தொடவே முடியாது. தொடவும் விடமாட்டார்கள். தொடர் வெற்றிப்படங்களில் நடித்து புகழ் பெற்றாலும் அவர்களால் அடுத்த அஜித் விஜய் இடத்தை பிடிக்கவே முடியாது. அப்படி மீறி படங்களில் நடித்தாலும் அதை வாங்குவதற்கு விநியோகிஸ்தர்கள் மிகக்குறையாகவே இருப்பார்கள்.

Maan Karate Success Meet with Sivakarthikeyan, Hansika Motwani

இந்நிலையில் பேட்டி ஒன்றில் விஜய் அஜித்தை காட்டிலும் சிவகார்த்திகேயன் தான் பெரிய ஹீரோ என கூறியுள்ளார் சவுக்கு சங்கர். அவர்களை காட்டிலும் ஓரிரு வருடத்திற்கு அதிக வெற்றி படங்களையும் படத்தை வாங்கும் விநியோகிஸ்தர்களுக்கு நல்ல லாபமும் ஈட்டி கொடுக்கிறார் சிவகார்த்திகேயன். அப்படியிருந்தும் விஜய் அஜித்தை தாண்ட விடமாட்டேங்குறாங்க ஏன்? அவங்க ரெண்டு பேரு மட்டும் தான் சினிமாவில் பட்டா வாங்கி வச்சியிருக்காங்களா? என நறுக்குன்னு கேள்வி கேட்டு சிவகார்த்திகேயனுக்கு ஆதரவாக பேசியிருக்கிறார் சவுக்கு சங்கர்.

  • Ilayaraja Symphony நான் இசைக்கடவுளா? ரசிகர்களுக்கு இளையராஜா இசைக் கட்டளை!