காவாலைய்யா… காவாலைய்யா’னு ஆடினா மட்டும் போதுமா? கன்டென்ட் தான் முக்கியம்!

Author: Shree
27 July 2023, 5:14 pm

2005ம் ஆண்டு தனது 15 வயதில் பாலிவுட் திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் நடிகை தமன்னா. இதனைத் தொடர்ந்து, தமிழில் கேடி என்னும் திரைப்படத்தில் நடித்தார். இப்படத்தில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்த இவர், படையப்பா படத்தில் ரம்யா கிருஷ்ணன் போல இருந்ததாக ரசிகர்களும் பத்திரிக்கைகளும் வர்ணித்தது.

இதனைத் தொடர்ந்து, வியாபாரி படத்தில் எஸ்.ஜே.சூர்யா ஜோடியாக நடித்தார். பின்னர், கல்லூரி, படிக்காதவன், அயன், சுறா, பையா, கண்டேன் காதலை போன்ற திரைப்படங்கள் மூலம் தனது நேர்த்தியான நடிப்பு, பால் நிற தேகம் என ரசிகர்களை சுத்தலில்விட்டார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு மற்றும் ஹிந்தி திரைப்படங்களிலும் முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்து பிரபலமாக உள்ளார்.

இவர் நடிப்பில் கடைசியாக ஆக்ஷன் திரைப்படம் தமிழில் வெளிவந்தது. இதன்பின் தமிழில் எந்த ஒரு படத்திலும் தமன்னா நடிக்கவில்லை. ஆனால், ஹிந்தி மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் பிஸியாக நடித்து வருகிறார். இந்தியில் தயாராகிய ஆந்தாலஜி படமாக லஸ்ட் ஸ்டோரி 2 படத்தில் நடித்து முகம் சுளிக்க வைத்தார். அதையடுத்து தற்போது ரஜினியின் ஜெயிலர் படத்தில் தமன்னா நடித்து வருகிறார்.

குறிப்பாக ஜெயிலர் படத்தில் காவாலா பாடலுக்கு தமன்னா போட்ட தமிழ்நாடு முழுக்க பரவலாக பேசப்பட்டது. தற்ப்போது பீக்கில் இருக்கும் நடிகைகள் லிஸ்டில் தமன்னாவும் இடம் பிடித்துவிட்டார். அந்த பாடல் மாபெரும் ஹிட் அடித்து விட்டது. இந்நிலையில் தற்போது ஜெயிலர் படத்தை இந்தியில் ப்ரோமோஷன் செய்யும் வேளையில் தீவிரமாக இறங்கியுள்ளார் தமன்னா அப்போது காவாலா பாடலின் ஹிட் குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர்,

காவாலா பாடலை ஹிட் ஆக்கிய அனைவருக்கும் எனது நன்றிகள், எல்லோரும் எனது நடனம் குறித்து பேசுகிறார்கள். நிச்சயம் ஒரு ஹீரோவால் இந்த பாட்டுக்கு ஆட முடியாது. அது தான் என் வேலை அதை நான் சிறப்பாக செய்துள்ளேன். இருந்தாலும் ஒரு படத்தின் வெற்றிக்கு பாடல்களும், கவர்ச்சியும் மட்டும் போதாது. படத்தின் கன்டென்ட் தான் முக்கியம்.

மேலும், இப்படத்தில் ரஜினிகாந்த், மோகன்லால், சிவராஜ்குமார், ரம்யா கிருஷ்ணன் என ஒரு பெரிய பட்டாளமே நடித்துள்ளனர். அவர்கள் அனைவருமே தங்களது பங்கை சிறப்பாக செய்துள்ளனர். நிச்சயம் ஜெயிலர் ரசிகர்களுக்கு மிகப்பெரிய விருந்தாக இருக்கும். திரைக்கு வரும் எல்லோரையும் என்ஜாய் பண்ண வைக்கும் என தமன்னா உறுதியளித்தார்.

  • ajith kumar asking for script to bala but bala did not give Full Script கொடுக்க மாட்டேன்- அஜித்தின் முகத்துக்கு நேராக சொன்ன பிரபல இயக்குனர்…