அதிவேகமாக பைக்கில் வந்த இளைஞர்… தூக்கிவீசப்பட்ட கல்லூரி மாணவிகள்… ஒருவர் பலி ; கண் இமைக்கும் நேரத்தில் ஷாக்!!
Author: Babu Lakshmanan27 July 2023, 8:24 pm
அதிவேகத்தில் வந்த பைக் மோதி கல்லூரி மாணவிகள் தூக்கி வீசப்பட்ட விபத்தின் பதற வைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.
கேரளா மாநிலம் மூவாற்றுபுழா பகுதியில் உள்ள நிர்மலா கல்லூரி ஜங்ஷனில் சாலையைக் கடக்க இரு மாணவிகள் முயன்றனர். அப்போது, அந்த சாலை வழியாக அதிவேகத்தில் வந்த பைக் ஒன்று, இரு மாணவிகள் மீது மோதியது. இதில், இருவரும் தூக்கி வீசப்பட்டனர்.
அங்கிருந்தவர்கள் இரு மாணவிகளையும் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். ஆனால் நமீதா என்ற மாணவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
படுகாயங்களுடன் அனுஸ்ரீ ராஜ் என்ற மாணவி உயிருக்கு ஆபத்தான நிலையில், தற்போது சிகிச்சை பெற்றும் வருகிறார். மேலும், இந்த விபத்து குறித்து பைக் ஓட்டி மீது வழக்கு பதிவு செய்து இளைஞரை கைது செய்துள்ள நிலையில், இந்த விபத்தின் பதற வைக்கும் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி உள்ளன.