எனக்கு ராஜாவா நான் வாழுறேன்…. பணத்தில் புரளும் தனுஷின் சொத்து மதிப்பு எத்தனை கோடி தெரியுமா?

Author: Shree
28 July 2023, 9:34 am

சூப்பர் ஸ்டார் ரஜினியின் தீவிர ரசிகரான தனுஷ் அவரது மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்தை திருமணம் செய்துக்கொண்டு இரண்டு பிள்ளைகளை பெற்றார். தனுஷுக்கு திருமணம் ஆன அந்த சமயத்தில் அவர் அப்படி ஒன்றும் பெரிய ஹீரோவாக இல்லை. இருந்தாலும் ரஜினி அவர் மீது பெரிய நம்பிக்கை வைத்து மகளை கட்டிக்கொடுத்தார்.

அதன் பின்னர் தொடர்ந்து தனுஷுக்கு தொடர்ந்து பல்வேறு உதவிகளை செய்து அவரை டாப் ஹீரோ என்ற அந்தஸ்திற்கு உயர்த்தினார் ரஜினி. கிட்டத்தட்ட அவரது மொத்த வெற்றிக்கும் பின்னர் ரஜினி தான் இருந்தாராம். என்ன தான் திறமை இருந்தாலும் சினிமா துறையை பொறுத்தவரை யாரேனும் மிகப்பெரிய ஆள் பலம் இருக்கவேண்டும். அப்படி இருந்தால் தான் எந்த தொல்லைகளும், தொந்தரவும் இல்லாமல் முன்னேற முடியும்.

எனவே ஒவ்வொரு படி முன்னேற்றத்திற்கும் ரஜினி கூடவே இருந்ததால் தான் தனுஷ் இந்த உச்சத்தை தொட்டிருக்கிறார். ஆனால் ஐஸ்வர்யாவை பிரிந்த பின்னர் ரஜினிக்கும் – தனுஷுக்கும் இடையில் மிகப்பெரிய மனக்கசப்பு ஏற்பட்டுவிட்டது. இருவரும் தனித்தனியே வாழ்ந்து தங்களது சினிமா கெரியரில் கவனத்தை செலுத்தி வருகிறார்கள்.

தனுஷ் தற்போது தமிழ் சினிமாவில் தவிக்கமுடியாத நடிகராக இருந்து வருகிறார். கோலிவுட், பாலிவுட், ஹாலிவுட் என அசுர வளர்ச்சி அடைந்துவிட்டார். இந்நிலையில் தனுஷின் சொத்து மதிப்பு குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அவர் ஒரு படத்திற்கு கிட்டத்தட்ட ரூ. 50 கோடி சம்பளமாக வாங்குகிறார். மேலும் ரூ. 18 கோடியில் ஆழ்வார்பேட்டையில் சொகுசு வீடு ஒன்று உள்ளது.

அது தவிர ரூ. 150 கோடியில் போயஸ் கார்டனில் பங்களா காட்டியுள்ளார். மேலும் அவரிடம், ஜாகுவார் XE, ஃபோர்ட் மஸ்டாங்க், பெண்ட்லி, ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட், ஆடி A8, மெர்சிடிஸ் பென்ஸ் S-Class பல ஆடம்பர கார்கள் வைத்திருக்கிறார். இதையெல்லாம் வைத்து பார்த்தால் கிட்டத்தட்ட ரூ. 200 கோடி சொத்து மதிப்பு இருக்கும் என யூகிக்க முடிகிறது. தனுஷ் தற்போது கேப்டன் மில்லர் என்ற படத்தில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

  • anthanan funny criticize on good bad ugly movie ரசிகர் மன்றத் தலைவர் எடுத்த படம் மாதிரி இருக்கு- GBU-வை கண்டபடி கலாய்த்த பிரபலம்