கமல் கூட நடிக்க முடியாது.. ரஜினி கிட்ட அட்வான்ஸை திருப்பி கொடுத்துடுங்க.. பிடிவாதமாக இருந்த நடிகை..!
Author: Vignesh28 July 2023, 5:36 pm
எண்பதுகளில் தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகைகளில் ஒருவர் நடிகை ஜெயஸ்ரீ. இயக்குனர் ஸ்ரீதர் இயக்கத்தில் 1955 ஆம் ஆண்டு தென்றலே என்னைத் தொடு என்ற படத்தில் மூலமாக கதாநாயகியாக அறிமுகமானவர் தான் ஜெயஸ்ரீ.
இவர் அடுத்தடுத்த படங்களில் நடித்து நான்கு ஆண்டுகளில் சுமார் 20க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து பிரபலமானார். ஹோட்டல் மேனேஜ்மென்ட் படிப்பை முடித்து வெளிநாட்டில் செட்டில் ஆக நினைத்த இவருக்கு சினிமா வாய்ப்பு கதவை தட்டியது.
குடும்பத்தினர் படிப்பு முடிந்து திருமணம் செய்ய முடிவெடுத்த நிலையில், இயக்குனர் ஸ்ரீதர் ஜெயஸ்ரீயை பார்த்ததும் அவரது தாயாரிடம் சென்று படத்தில் ஹீரோயினாக நடிக்க சம்மதம் கேட்டுள்ளார். ஆனால், ஆரம்பத்தில் குடும்பத்தினர் வேண்டாம் என்று கூறி உள்ளனர்.
இதனிடையே, சினிமாவில் நடித்தால், பணம் புகழ் வரும் என்று கூறியதும் அதற்கு ஒப்புக்கொண்டனர். அதன் பின்னர் தென்றலே என்னை தொடு படத்தில் நடித்து நல்ல வரவேற்பை பெற்றார் ஜெயஸ்ரீ.
இவ்வாறாக படங்களில் நடித்து வந்த ஜெயஸ்ரீக்கு 1989 இல் அமெரிக்க மாப்பிள்ளை வரன் வந்துள்ளது. அப்போது, கே பாலச்சந்தர் இயக்கத்தில் உருவான புன்னகை மன்னன் படத்தில் முதலில் ஜெயஸ்ரீ தான் நடிக்க இருந்ததாகவும், ஆனால் கமல்ஹாசன் உடன் முத்த காட்சிகளின் நடிக்க வேண்டும் என்பதால் ஜெயஸ்ரீ வேண்டாம் என்று தெரிவித்துவிட்டாராம்.
இதனால், வேறொரு நிகழ்ச்சியில் கமிட்டாகியதால் கமலஹாசன் படத்தில் நடிக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டதாக ஜெயஸ்ரீ சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்திருந்தார். அந்த சமயத்தில் இயக்குனர் பாலச்சந்தர் எவ்வளவு சொல்லியும் மறுத்த ஜெயஸ்ரீ அதன் பின் ரஜினிகாந்த் படமான குரு சிஷ்யன் என்ற படத்தில் கௌதமி ரோலில் நடிக்க தேர்வு செய்யப்பட்டு இருந்தார்.
ஆனால் வாங்கிய அட்வான்ஸ் தொகையை திருப்பிக் கொடுத்து நடிக்க முடியாது என்று கூறிவிட்டாராம். ரஜினிகாந்தை ஒரு சமயத்தில் நீதான் என் படத்தில் நடிக்க மறுத்த முதல் நடிகை என்று கிண்டலும் செய்தாராம். அதன்பின் அமெரிக்கா வங்கி அதிகாரியான சந்திரசேகர் என்பவரை 1988 திருமணம் செய்து கொண்டு பின் சினிமாவில் இருந்து விலகி மகன்களை கல்லூரியில் படிக்க வைத்து வருகிறார்.
இதனிடையே, அமெரிக்க நிறுவனத்தின் முக்கிய நிர்வாகியாக பணியாற்றி வந்த ஜெயஸ்ரீ சமீபத்தில் எதிர்நீச்சல் செட்டிற்கு வந்து நடிப்பதாகவும் இருந்ததாம். இதுகுறித்து சமீபத்திய புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது குறிப்பிடத்தக்கது.