விஜய் அம்மாவின் ஆசையை நிறைவேற்றப்போகும் தமன்னா – சினிமா வட்டாரத்தில் ஒரே சலசலப்பு!
Author: Shree28 July 2023, 7:52 pm
நடிகை தமன்னா தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம், மராத்தி மொழிப் படங்களில் நடிப்பவர். 2005ல் சந்த் சா ரோஷன் செகரா என்ற இந்தித் திரைப்படத்தில் அறிமுகமானார். தமிழ் திரைப்பட உலகில் கேடி படம் மூலம் அறிமுகமானார். கல்லூரி திரைப்படம் தமன்னாவுக்கு சிறப்பு அங்கீகாரம் கொடுத்தது.
தொடர்ந்து அஜித், விஜய், தனுஷ், சூர்யா, என பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்து பெரும் புகழ் பெற்றார். இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்பு தமன்னா இந்தி நடிகர் விஜய் வர்மா உடன் பார்ட்டியில் லிப்லாக் செய்த வீடியோ இந்த இணையத்தில் வைரல் ஆனது.
இதையடுத்து அவர்கள் இருவரும் தங்களது காதலை உறுதிப்படுத்திய நிலையில் விஜய் வர்மாவின் அம்மா திருமணம் எப்போ என்பது குறித்து கேள்வி எழுப்பி வருவதாக விஜய் பேட்டி ஒன்றில் கூறியிருந்தார். இதனால் இருவரும் விரைவில் திருமணம் செய்துக்கொண்டு அம்மாவின் ஆசையை நிறைவேற்ற முடிவெடுத்துள்ளனராம். எனவே விரைவில் தமன்னா – விஜய் வர்மா ஜோடியின் திருமண அறிவிப்பு வெளியாகலாம் என பாலிவுட் சினிமா வட்டாரத்தில் பேச்சுக்கள் நிலவி வருகிறது.