குடிப்பழக்கத்தால் கெட்டு குட்டி சுவர் ஆனேன்… “ஜெயிலர்” மேடையில் அவமானப்பட்ட ரஜினி!

Author: Shree
29 July 2023, 10:44 am

தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்திற்கு தற்போது 72 வயது ஆகிறது. இன்னுமும் ஸ்லிம் பிட் தோற்றத்தை வைத்து மாஸ் ஹீரோவாக திரைப்படங்களில் நடித்து வருகிறார். அவருக்கு அடித்து எத்தனை இளம் நடிகர்கள் வந்தாலும் கனவில் கூட சூப்பர் ஸ்டார் இடத்தை நிரப்பவே முடியாது. தற்போது நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் ஜெயிலர் படத்தில் நடித்துள்ளார்.

RAJINI JAILER

வருகிற ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளியாக உள்ள இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று மாலை சென்னையில் உள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் மிக பிரம்மாண்டமாக நடந்தது. இவ்விழாவில் பேசிய ரஜினிகாந்த் படம் குறித்தும், இயக்குனர் நெல்சன் குறித்தும் பேசியிருந்ததை முந்தைய செய்திகளில் பார்த்திருப்போம்.

அந்தவகையில் தற்போது தன் ரசிகர்களுக்கு ரஜினி ஒரு அறிவுரையை வழங்கியிருக்கிறார். அதாவது, உடலை கெடுக்கும் எந்த தீய பழகத்திலும் உங்களை ஈடுபடுத்திக்கொள்ளாதீர்கள். தயவு செய்து குடிப்பழக்கத்தை விட்டு விடுங்கள். நான் குடித்து எனக்கு நானே சூன்யம் வைத்துக்கொண்டேன். ஒருவேளை நான் குடிக்கும் பழக்கம் இல்லாதவனாக இருந்திருந்தால் இப்போது இருப்பதை விட இன்னும் உயரத்தில் இருந்திருப்பேன். எனவே குடிக்கவேண்டாம் குடிப்பழக்கம் உங்களுடைய அம்மா, பொண்டாட்டி, குடும்பத்தில் இருக்கிறவங்களை கஷ்டப்படுத்தும் என பேசினார்.

இது போன்று ரஜினி ஏற்கனவே பேட்டி ஒன்றில், எனக்கு ஆரம்ப காலத்தில் நிறைய கெட்டபழக்கங்கள் இருந்தது. தினமும் தண்ணி அடிப்பேன், பாக்கெட் கணக்கில் சிக்ரெட் பிடிப்பேன் இதெல்லாம் என்னுடைய உடலை கொஞ்சம் கொஞ்சமாக கெடுத்தது. பின்னர் பல படங்களில் ஸ்டைலுக்காகவே சிக்ரெட்டை தூக்கிப்போட்டு பிடிப்பேன் அதையெல்லாம் வயது வித்தியாசமின்றி மக்கள் ரசித்தார்கள்.

RAJINI JAILER

ஆனால், அந்த அத்தனை கெட்ட பழக்கங்ககளில் இருந்தும் என்னை மீட்டெடுத்துவர் என்னுடைய மனைவி லதா தான், என் மனைவியின் அன்பாலும், நல்ல மருத்துவர்களின் சிகிச்சையாலும் தான் இன்று நான் ஆரோக்கியமாக இருக்கிறேன். எனவே தன்னை லதாவிடம் அறிமுகம் செய்து வைத்த நடிகர் ஒய்.ஜி.மகேந்திரனுக்கு இன்றுவரை நன்றி சொல்கிறேன் என ரஜினிகாந்த் பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது. .

  • Bigg Boss Anshitha akbarsha Pregnant அன்ஷிதா 3 மாதம் கர்ப்பமா? பிக் பாஸ் வீட்டுக்குள் என்ன நடக்குது?!
  • Views: - 357

    1

    0